PDF chapter test TRY NOW
சென்றப்பகுதியில் மென்பொருளைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இப்பகுதியில், மென்பொருளின் வகைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
மென்பொருள்களைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவைகள் முறையே,
- இயக்க மென்பொருள் (SYSTEM SOFTWARE)
- பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)

இயக்க மென்பொருள் (OPERATING SYSTEM-OS):
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும். இது, கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் (Data) கொண்ட மென்பொருள் ஆகும். இயக்க மென்பொருள் (OS) இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.

இயக்க மென்பொருள்
Example:
Linux, Windows, Mac, Android.
பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE):
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள்கள் ஆகும். இது, இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இந்த மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளைச் செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகின்றது.

பயன்பாட்டு மென்பொருள்
Example:
Video players, Audio players, Word processing softwares, Drawing tools, Editing software’s, etc

இந்த இயக்க மென்பொருளையும் பயன்பாட்டு மென்பொருளையும் நாம் எப்படி பெறுவது? எங்கு பெறுவது? எதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? என்பது பற்றி அடுத்த பகுதியில் கற்றுக் கொள்வோம்.