PDF chapter test TRY NOW

உங்களுக்காக  சில கேள்விகள்!

உன் தாயார் உன்னிடம் தினமும் பால் வாங்கி வரச் சொல்கிறார். பால்காரரிடம் அதை எவ்வாறு கேட்பீர்கள்? பை நிறைய பால் கொடுங்கள் என்றா? இல்லை கோப்பை நிறைய பால் கொடுங்கள் என்றா?

 

பயிற்சியாளர் உன்னிடம் உன் உயரம் என்ன என்று கேட்கிறார். எவ்வாறு பதில் அளிப்பீர்கள்?

 

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயர, எந்த வகை போக்குவரத்தைப் பயன்படுத்துவீர்கள்? இந்த கேள்விகளுக்குப் பதில் வேண்டுமானால், அளவீடுகள் மற்றும் அலகுகள் குறித்து அறிவது அவசியமாகிறது.

 

உதாரணம்:

 

adult-apparel-blur-clothing-hand-indoors-1547683-pxhere.com.jpg

ஆடைகளை அளவிடுதல்

 
measuring-cup-ga3042fffa_1920.jpg

சமையல் பொருட்களை அளவிடுதல்

 

நன்கு தெரிந்த, நிரந்தரமான அளவுகளை வைத்து தெரியாத அளவுகளை ஒப்பபிடுவது அளவீடு எனப்படும். 

 

அளவீடுகளின் பாகங்கள்:

 

எண்மதிப்புகளும் அலகுகளும் அளவீட்டின் இரு முக்கிய பாகங்களாகும். உதாரணமாக, ஒரு புத்தகத்தின் அகலம் இரு கைகளின் இடைவெளி என்றால், அதில் இரண்டு என்பது எண்மதிப்பைக் குறிக்கும், கை இடைவெளி என்பது அலகைக் குறிக்கும். 

 

7 (3).png

ஒரு ஜான்  இடைவேளை

 

பண்டைய அளவீடுகள்

 

மனிதர்களுக்கு அளவீடுகள் பற்றிய சிந்தனை பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது என்பது, சிந்து சமவளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சியிலிருந்து உறுதியாகிறது. இன்றளவும், பூ வாங்கும்பொழுது முழத்திலும், ஆடைகளை கெஜங்களிலும்  பயன்படுத்துகிறோம்.

 

4 (5).png6 (4).png

காலடி, அங்குலம் மற்றும் முட்டி போன்றவை சில பண்டைய அலகுகளாகும். இவை அனைத்திலும், மக்கள் உடல் பாகங்களைக் கொண்டு அளவீடு செய்ததை அறிய முடியும். ஆனால் இந்த முறைகள் துல்லியமற்றவையாகும். ஏனெனில் நபருக்கு நபர் மாற்றம் இருப்பதால் சீரான அளவு இருப்பதில்லை.

SI அலகுகள்

 

\(1790\)-இல் பிரஞ்சு அறிஞர்கள் அலகுகளின் நிலையான தொகுப்பை உருவாக்கினர். மெட்ரிக் அமைப்பு என்ற அந்த தொகுப்பை சீரான அளவீடுகளுக்காக உருவாக்கினர். அளவீடுகளை, உலகில் அனைத்து பகுதிகளிலும், சீராக குறிக்க International System of Units அல்லது \(SI\) அலகுகள் அல்லது பன்னாட்டு அலகுகள் பயன்படுத்தபடுகின்றன.

 

அடிப்படை அளவுகளான நீளம், தொகுதி மற்றும் நேரம் முதலியவற்றின் மூலம் முன்பு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை கற்போம்.