PDF chapter test TRY NOW
ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தொலைவை , நீளம் எனலாம். பொதுவாக, தூரத்தின் அளவே நீளம் எனப்படும்.
உதாரணமாக, ஒரு நபரின் உயரத்தை அளக்க அவரின் தலை முதல் பாதம் வரை உள்ள தூரத்தை அளக்கலாம்.
நீளத்தின் அலகு:
நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும். இதைக்கொண்டு ஆடையின் நீளம், கட்டிடத்தின் உயரம், கம்பத்தின் உயரம் போன்றவற்றை அளக்கலாம்.
சிறிய தூரங்களான எழுதுகோலின் நுனியைக் கணக்கிடுவதற்கு மில்லிமீட்டர் அலகையும், அதன் உயரத்தைக் கணக்கிடுவதற்கு சென்டிமீட்டர் அலகையும் பயன்படுத்தலாம்.
பெரிய தூரங்களான இரு நகரங்கள் அல்லது இரு நாடுகளுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடுவதற்கு கிலோமீட்டர் அலகைப் பயன்படுத்தலாம்.
மாலுமிகள் கடலில் தூரத்தை எவ்வாறு அளவிடுவார்கள் என்று வியந்ததுண்டா?
கடலில் தூரங்களை கடல் மைல்கள் என்ற அலகுகளில் மாலுமிகள் அழைப்பர். தரையில் ஒரு மைல் என்பது \(1.6\) கிலோமீட்டர்கள். கடலில் ஒரு மைல் என்பது \(1.852\) கிலோமீட்டர்கள்.
இதுவரை கடலில் தூரங்களை எவ்வாறு அளவிடுகிறார்கள் என்று அறிந்தோம்.
அதுவே, விண்வெளியில் உள்ள வான்பொருள்களுக்கு இடையில் உள்ள தூரங்களை எவ்வாறு கணக்கிடுவது?
ஒளி ஆண்டு எனும் அலகு விண்வெளியில் உள்ள தொலைவுகளைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஒளி ஆண்டு என்பது, ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் மொத்த தூரம் என வரையறுக்கப்படுகிறது
ஒளி ஒரு நொடிக்கு \(3\) மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இந்த வேகத்தில் ஒரு ஆண்டிற்குப் பயணிப்பதால் கடக்கும் தூரத்தை ஒரு ஒளி ஆண்டு எனலாம்.
ஒளியின் வேகம் கி.மீ /வினாடி
ஒரு ஒளி ஆண்டின் கணக்கு:
ஒரு ஆண்டிற்கு எத்தனை நொடிகள் எனக் கணக்கிட வேண்டும். அதற்கு ஒரு ஆண்டிற்கான மொத்த நாட்கள், ஒரு நாட்களின் மொத்த மணிகள், ஒரு மணியின் மொத்த நிமிடங்கள், ஒரு நிமிடத்தின் மொத்த நொடிகள், இவையனைத்தையும் பெருக்க வேண்டும்.
நேரம் வினாடிகள்.
ஒளி ஆண்டு \(=\) ஒளி ஆண்டு × நேரம்
ஒரு ஒளியாண்டு \(=\) கி. மீட்டர்
வானியல் அலகு மற்றும் பார்செக் முதலியவையும் விண்வெளியில் பயன்படுத்தபடும் அலகுகள் ஆகும்.
Reference:
https://cdn.pixabay.com/photo/2012/02/29/15/43/empire-state-building-19109_1280.jpg
https://cdn.pixabay.com/photo/2018/11/07/23/08/sailing-3801448_1280.jpg