PDF chapter test TRY NOW
அளவுகோலின் பயன்பாடு
\(0\) முதல் \(1\) வரை உள்ள தொலைவு \(1\) சென்டிமீட்டரைக் குறிக்கும். இரு பெரிய கோடுகளுக்கு இடையில் \(9\) சிறிய கோடுகள் இருக்கும். இரு சிறிய கோடுகளுக்கும் உள்ள தொலைவு \(1\) மில்லிமீட்டரைக் குறிக்கும்.
அளவுகோலைக் கொண்டு குண்டூசியின் நீளத்தை அளவிடுதல்:
- குண்டூசியின் ஒரு முனையை \(0\) (சுழியம்) கோட்டிற்கு நேராக வைக்கவும்.
- முதலில், சென்டிமீட்டர் கோடுகளைக் கணக்கிடவும்.
- பிறகு, மில்லிமீட்டர் கோடுகளைக் கணக்கிடவும்.
மேலே உள்ள படத்தில் உள்ள குண்டூசியின் நீளம் \(2\) செ.மீ மற்றும் \(5\) மி.மீ.
அளவீட்டுக்கான திருத்தங்கள்
அன்றாட வாழ்க்கையில் அளவீடுகளின் துல்லியங்கள் குறையலாம். பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத சிறு சிறு பிழைகள் அளவுகளில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், அறிவியல் கணக்குகளில் இந்தப் பிழைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக, சாவியின் அளவில் \(1\) மி.மீ பிழை இருந்தாலும், பூட்டைத் திறக்க முடியாது.
கண்களின் நிலை
அளவீடுகளில் பார்வையாளரின் இடம் முக்கியப் பங்கு வகிக்கும். பார்வையாளர், அளவிடப்படும் பொருளுக்கும் அளவீட்டுக் கருவிக்கும் செங்குத்தாக, நேராக இருப்பது அவசியம். மாறாக, செங்குத்தான நிலைக்கு இட-வல நிலையில் இருந்தால் இடமாறு பிழை ஏற்படும்.
பொருளின் உண்மை நிலைக்கு மாறாக, வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்பொழுது ஏற்படுவதாக தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சியே இடமாறு தோற்றப் பிழை எனப்படும்.
Reference:
https://cdn.pixabay.com/photo/2015/11/05/05/46/ruler-1023726_1280.png