PDF chapter test TRY NOW

நாம் எப்பொழுதும் மீட்டர் மற்றும் சென்டிமீட்டர் போன்ற அலகுகளைப் பயன்படுத்துவோம். ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு மாற்றுவது எப்படி என்பதைக் காண்போம்.
 
ஒரு மில்லிமீட்டர் (மி.மீ) என்பது ஒரு சென்டிமீட்டரின் (செ.மீ) பத்தில் ஒரு பங்கு.
 
1 செ.மீ = 10 மி.மீ
 
ஒரு சென்டிமீட்டர் (செ.மீ) என்பது ஒரு மீட்டரின் (மீ) நூறில் ஒரு பங்கு.
 
1 மீ = 100 செ.மீ
 
1000 மீட்டர் (மீ) என்பது ஒரு கிலோமீட்டரை (கி.மீ) குறிக்கும்.
 
1 கி.மீ = 1000 மீ
 
ஒரு அளவை மில்லிமீட்டரிலிருந்து (மி.மீ) சென்டிமீட்டருக்கு (செ.மீ) மாற்ற அதைப் பத்தால் வகுக்க வேண்டும். ஒரு அளவை சென்டிமீட்டரிலிருந்து (செ.மீ) மில்லிமீட்டருக்கு (மி.மீ) மாற்ற அதைப் பத்தால் பெருக்க வேண்டும்.
 
உதாரணம்:
 
ஒரு கிலோமீட்டரை (கி.மீ) சென்டிமீட்டருக்கு (செ.மீ) மாற்றுக.
  
\(1\) கி.மீ \(= 1000\) மீ
  
\(1\) மீ \(= 100\) செ.மீ எனில்,
  
எனவே, கிலோமீட்டரை (கி.மீ) சென்டிமீட்டராக (செ.மீ) மாற்ற, கொடுக்கப்பட்ட எண் \(1\) ஐ \(100000\) ஆல் பெருக்கவும்.
  
\(1\) கி.மீ \(= 1000 × 100\) செ.மீ \(1\) கி.மீ \(= 100000\) செ.மீ.
 
மற்ற அலகு மாற்றங்களை கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.
 
முன்னொட்டு
குறியீடு
பன்மடங்கு/ துணைப் பன்மடங்குகள்
மீட்டருக்கு....
டெசி
\(d\)
110or101
\(10\) டெசி.மீ \(= 1\) மீ
சென்டி
\(c\)
1100or102
\(1000\) மி.மீ \(= 1\) மீ
மில்லி
\(m\)
11000or103
\(1000\) மி.மீ \(=\) \(1\) மீ
நானோ
\(n\)
11000000000or109
\(1000000000\) நானோ.மீ \(= 1\) மீ
கிலோ
\(k\)
1000or103
\(1\) கி.மீ \(= 1000\) மீ
 
நீளத்தை அளவிடும் கருவிகள்:
 
பொருட்களின் நீளத்தை அளக்க \(16\)-ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் அளவுகோலை அல்லது மீட்டர் அளவையை  வடிவமைத்தார்.
 
ruler-146428_1280.png
 

சிறிய நீளங்களை அளக்க அளவை நாடா பயன்படுகிறது. 

  

measuring-tape-789899_1280.jpg
 
வாகனங்கள் கடக்கும் தூரத்தை அளக்க ஓடோமீட்டர் பயன்படுகிறது. பேருந்து போன்ற வாகனங்களின் முகப்பில் இந்தக் கருவியைக் காணலாம்.
  
6963327133_8a34160c3d_c.jpg
 
Important!
பாரிஸில் உள்ள  Bureau of Weights and Measures  எனும் அமைப்பில், பிளாட்டினம் மற்றும் இரிடியம் கலந்த ஒரு நிலையான மீட்டரளவைத்தண்டு உள்ளது. இதனுடைய மாதிரியானது புது தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Reference:
https://www.flickr.com/photos/nicholas_t/6963327133