PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பருப்பொருட்களின் வகைகள்:
 
பருப்பொருட்களைத் தூயப் பொருட்கள் மற்றும் கலவைகள் என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். மேலும் தூயப் பொருட்களைத் தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.
 
தனிமங்கள்:
பருப்பொருளின் மிக எளிமையான வடிவம் தனிமம் என்று அழைக்கப்படுகிறது.
நம் அன்றாட வாழ்வில் பல்வேறு தனிமங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, நாம் உபயோகிக்கும் சமையல் உப்பு சோடியம் மற்றும் குளோரின் என்ற இரண்டு தனிமங்களைக் கொண்டுள்ளது.
 
thanimam.png
 
நீர், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற இரண்டு தனிமங்களைக் கொண்டுள்ளது. மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் வெடி பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. விவசாயத்தில் சல்பர் மற்றும் நைட்ரஜன், உரங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. காலியம் அலைபேசி தயாரிப்பிலும், சிலிக்கன் கணினி மற்றும் தொலைபேசி சிப்புகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.
 
வேதியியலில் இந்நாள் வரை \(118\) தனிமங்கள் கண்டுபிக்கப்பட்டுள்ளன. இவற்றில் \(94\) தனிமங்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. மீதமுள்ள \( 24\) தனிமங்கள் ஆய்வகங்களில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
தனிமங்களின் வகைகள்:
 
நாம் தனிமங்களை அவற்றின் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என்று வகைப்படுத்துகிறோம்.
 
உலோகங்கள்:
  
நாம் கருவிகள், பாத்திரங்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை வெள்ளி, காப்பர், இரும்பு, தங்கம், அலுமினியம் போன்ற பொருட்களிலிருந்து பெறுகிறோம். இப்பொருட்களை அடித்தல் அல்லது உருட்டுதல் மற்றும் உருக்குதல் போன்ற செயல்களின் மூலம் பல்வேறு வடிவம் மற்றும் பயன்களைப் பெறுகிறோம். இத்தகைய, தகடாக மாற்றக்கூடிய பல்வேறு வடிவங்களைப் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பொருட்கள் அனத்தும் உலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 
 
உலோகங்களின் பண்புகள்:
 
பொதுவாக உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை. விதிவிலக்காகச் சோடியம் மட்டும் மென்மையான உலோகமாகும். பாதரசம் தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கின்றன. இவற்றைக் கம்பியாக மற்றும் தகடாக மாற்ற முடியும். இவை மின்னோட்டம் மற்றும் வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடிய கடத்திகளாகும். தாமிரம், காரீயம், டின், நிக்கல், இரும்பு, துத்தநாகம், தங்கம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை உலோகங்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும்.
 
Aluminium uses.jpg
உலோகங்களின் எடுத்துக்காட்டுகள்