PDF chapter test TRY NOW
அலோகங்கள்:
பொதுவாக அலோகங்கள் பளபளப்பு
தன்மையற்ற மற்றும் மிருதுவான
தனிமங்கள் ஆகும். விதிவிலக்காக இந்தப் பூமியில்
கிடைக்கக்கூடிய விலை உயர்ந்த வைரம் கடினமான
மற்றும் பளபளப்பான தனிமம் ஆகும். இவை
திண்மம், நீர்மம் மற்றும் வாயு நிலையில்
இருக்கின்றன.
ஆக்சிஜன், ஹைட்ரஜன்
மற்றும் குளோரின் போன்றவை அறை
வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ளன.
கார்பன், அயோடின், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அறை வெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படும் அலோகங்கள்
ஆகும்.
அறைவெப்பநிலையில் திரவ
நிலையில் காணப்படும் ஒரே அலோகம்
புரோமின் ஆகும்.
அலோகங்களின் எடுத்துக்காட்டுகள்
பொதுவாக அலோகங்கள் வெப்பம்
மற்றும் மின்சாரத்தைக் கடத்தாத அரிதிற்க் கடத்தியாகும். இருந்தப போதிலும் கார்பனின்
புறவேற்றுமை வடிவமான கிராபைட்
நன்கு மின்சாரத்தினைக் கடத்தக்கூடிய
கடத்தியாக செயல்படுகிறது.
உலோகப்போலிகள்:
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் தனிமங்கள்
உலோகப்போலி எனப்படும். சிலிக்கன்,
ஆர்சனிக், ஆன்டிமணி மற்றும் போரான்
ஆகியவை உலோகப்போலிகளுக்கு
சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
உலோகப்போலிகளின் எடுத்துக்காட்டுகள்
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் இடையே உள்ள வேறுபாடுகள்:
உலோகங்கள் | அலோகங்கள் |
உலோகங்கள் பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டவை. | அலோகங்கள் பளபளப்புத் தன்மையறவை. |
இவை பொதுவாகக் கடினமானவை. | இவை பொதுவாக மிருதுவானவை. |
அநேக உலோகங்கள் வளையக்கூடிய தன்மை கொண்டவை. | அலோகங்கள் வளையும் தன்மையற்றவை. |
தகடாகவும், கம்பியாகவும் நீட்டலாம். | தகடாகவும், கம்பியாகவும் நீட்ட இயலாது |
பெரும்பாலான உலோகங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தக்கூடியவை. | அலோகங்கள் மின்சாரத்தை அரிதிற் கடத்தும் தன்மையுடையவை. |
வெப்பத்தை நன்கு கடத்தும். | வெப்பத்தை அரிதிற் கடத்தும். |
உலோகங்களைத் தட்டும்போது ஒலியெழுப்பும். ஆகையால் மணிகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. | ஒலியெழுப்பும் தன்மையற்றது. |