PDF chapter test TRY NOW

டால்டனால் முன்மொழியப்பட்ட சில தனிமங்களின் குறியீடுகளை காண்போம். 
 
 Screenshot_13.png
 
தனிமங்களின் குறியீட்டை எழுதும்போது பின்வரும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்றப்படுகின்றன.
  • தனிமங்களின் குறியீட்டில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் மட்டுமே இடம்பெற்று இருக்க  வேண்டும.
  • பொதுவாக தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து கொண்டு குறிக்கப்படுகிறது. உதாரணமாக ஆக்சிஜனின் குறியீடு O எனவும், ஹைட்ரஜனின் குறியீடு H எனவும் குறிக்கப்படுகின்றது.
தனிமம்
ஒரு எழுத்து
குறியீடு
ஹைட்ரஜன்
H
பாஸ்பரஸ்
P
சல்பர்
S
பொட்டாசியம் 
K
  • ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும்போது அத்தனிமத்தின் முதல் இரண்டு எழுத்துகளைக் குறியீடாக குறித்து கொள்ள வேண்டும். அவ்வாறு எழுதும்போது முதல் எழுத்தைப் பெரிய எழுத்திலும், இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.
உதாரணமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்களின் முதல் எழுத்தும் H ல் தொடங்குவதால், ஹைட்ரஜனை H எனவும் ஹீலியத்தை He எனவும் குறிக்கிறோம். அதேப்போல் கார்பனின் குறியீடு C, கால்சியம், குளோரின், குரோமியத்தின் குறியீடுகள் முறையே Ca, Cl, Cr என்று குறிக்கப்படுகின்றன.
 
தனிமம்
இரண்டு எழுத்து  குறியீடு
அலுமினியம்
Al
பேரியம்
Ba
கோபால்ட்
Co
மக்னீசியம்
Mg
  • சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் லத்தீன் மொழி பெயர்களிலிருந்து எடுக்கப்பட்டவை. உதாரணமாக, தங்கத்தின் குறியீடு Au என்பது அதன் லத்தீன் பெயரான ‘ஆரும்’ என்பதிலிருந்தும், தாமிரத்தின் குறியீடு Cu அதன் இலத்தீன் பெயரான ‘குப்ரம்’ என்பதிலிருந்தும் பெறப்பட்டதாகும்.
தனிமம்
இலத்தீன்
பெயர்
குறியீடு
காரியம்
Plumbum
Pb
மெர்குரி
Hydrargyrum
Hg
இரும்பு
Ferrum
Fe