PDF chapter test TRY NOW
ஒரு தனிமத்தின் குறியீடு
என்பது அத்தனிமத்தினைச்
சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய
எளிய முறையாகும். ஒவ்வொரு
தனிமமும் தனிப்பட்ட
குறியீட்டைக் கொண்டுள்ளது. இக்குறியீடு
அத்தனிமத்தின் ஒரு அணுவினைக் குறிக்கிறது.
இக்குறியீடுகள் பொதுவாக ஆங்கிலம் அல்லது
இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.
இக்குறியீடுகள் International Union of Pure and
Applied Chemistry (IUPAC) யினால்
அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதும்
அங்கீகரிக்கபட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
குறியீடுகளைத் தகுந்த முறையில்
பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் டால்டன் ஆவார். இவர் குறியீட்டைக் குறிக்கும்
போது அத்தனிமத்தின் ஒரு அணுவினை
மட்டும் குறிக்கக்கூடிய குறியீட்டினைப்
பயன்படுத்தினார். பெர்சிலியஸ் தனிமங்களின்
குறியீடுகளை அத்தனிமங்களின் பெயர்களில்
உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைப்
பயன்படுத்தி உருவாக்கும் முறையைப்
பரிந்துரைத்தார்.
தனிமங்கள் மற்றும் சேர்மங்களுக்கிடையேயான வேறுபாடுகள்:
தனிமங்கள் | சேர்மங்கள் |
தனிமங்கள் பருப்பொருளின் எளிமையான வடிவமாகும். | சேர்மங்கள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைவதின் மூலம் உருவாகும் ஒரு வேதியியல் பொருளாகும். |
தனிமங்கள் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன. | சேர்மங்களை தனிமங்களாகப் பிரிக்க இயலும். |
தனிமங்களில் அணுக்கள் அடிப்படைத் துகளாகும். | சேர்மங்களில் மூலக்கூறு அடிப்படைத் துகளாகும். |