PDF chapter test TRY NOW
இந்த அண்டத்தில் பல விண்மீன் கூட்டங்கள் உள்ளன. அவற்றில் நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன் பெயர், ப்ராக்ஸிமா சென்டாரி (Proxima Centauri) ஆகும். இதன் தொலைவு \(2,68,770\) வானியல் அலகாகும். இவ்வளவு நீண்ட நெடிய தொலைவை வானியல் அலகால் குறிப்பிடுவது என்பது கடினம் ஆகும்.
எனவே, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இரு விண்மீன்களுக்கு இடையில் உள்ள தொலைவு போல், மிக நீண்ட தொலைவுகளை அளக்க “ஒளி ஆணடு” என்னும் ஒரு தனித்தன்மை வாயந்த புதிய அலகினைப் பயன்படுத்துகின்றனர்.
ஒளியின் வேகம்
நமக்கு தெரியும் ஒளி ஒரு வினாடியில் மீ தொலைவைக் கடக்கும். அதாவது, வெற்றிடத்தில் ஒளியின் வேகம் (மீ/வி) ஆகும்.
ஓர் ஆண்டு என்பது \(365\) நாட்களை கொண்டது ஆகும். அதில் ஒரு நாள் என்பது \(24\) மணி நேரம் கொண்டது ஆகும், ஒரு மணி நேரம் என்பது \(60\) நிமிடங்களை கொண்டது ஆகும், ஒரு நிமிடம் என்பது \(60\) வினாடிகளை கொண்டது ஆகும்.
ஆகவே, ஓர் ஆண்டில் உள்ள மொத்த வினாடிகளின் எண்ணிக்கை:
\(= 3.153 × 10^7\) வினாடிகள் ஆகும்.
ஒளியானது ஒரு வினாடியில் மீ தொலைவைக் கடக்கும் எனில், ஓர் ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவு மீட்டர் தொலைவே ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
ஒரு ஒளியாண்டு மீ.