PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நம் அன்றாட வாழ்வில், அளவிடும் நீளங்களைக் குறிக்க சென்டிமீட்டர், மீட்டர் மற்றும் கிலோமீட்டர் போன்ற அலகுகளைப் பயன்படுத்துகிறோம்.
 
ஆனால், விண்வெளி ஆராய்ச்சியில், ஈடுபடும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அல்லது இரு விண்மீன்களுக்கு இடையில் உள்ள தொலைவு போன்ற மிக நீண்ட தொலைவுகளை அளக்க எந்த அளவைப் பயன்படுத்துகின்றனர் என்று நாம் எப்பொழுதாவது சிந்தித்தது  உண்டா ?
 
இத்தகைய தொலைவுகளை அளவிட, கீழ்காணும் இரு அலகுகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை:
  
1வானியல் அலகு
 
2. ஒளி ஆண்டு
வானியல் அலகு
பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். அகவே, பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையயயுள்ள தொலைவு மிகக்குறைவாக இருக்கும் பொழுது, அதாவது பூமி அதன் அண்மை நிலையில் இருக்கும் பொழுது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையயயுள்ள தொலைவு சுமார் \(147.1\) மில்லியன் கிலோமீட்டராக இருக்கும்.
 
6 (3).png
பூமியின்  அண்மை (ம) செய்மை நிலை
 
அதேபோல பூமியானது சூரியனிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள பொழுது அதாவது செய்மை  நிலை இருக்கும் போது, அவற்றிற்கிடையேயான தொலைவு சுமார் \(152.1\) மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். 
 
எனவே, பூமிக்கும், சூரியனுக்கும் இடையயயுள்ள  சராசரித் தொலைவு \(149.6\) மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இத்தொலைவை  “வானியல் அலகு” என்ப்படும் .
 
அதேபோல, நெப்டியூன், சூரியனிலிருந்து \(30\) வானியல் அலகு தொலைவில் உள்ளது. அதாவது, நெப்டியூன் சூரியனிலிருந்து பூமி இருக்கும் தொலைவில் \(30\) மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.
 ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் , சூரியனுக்கும் இடையயயுள்ள  சாரசரித் தொலைவு ஆகும்.
\(1\) வானியல் அலகு \(= 149.6\) மில்லியன் கி. மீ  =149.6×106கி.மீ=1.496×1011மீ ஆகும்.