PDF chapter test TRY NOW

நாம் தினம்தோறும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் எடையை கணக்கிடுகிறோம், மற்றும் திரவங்களின் கனஅளவு, பொருளின் வெப்பநிலை, வாகனங்களின் வேகம் போன்ற பலவற்றினை அளவிடுவதை பார்த்து இருப்போம்.
 
அதேபோல, கீழே காணப்படும் பொருள்களை, நாம் எந்த அலகினைக் கொண்டு அளந்தறிவது என்று பார்க்கலாம்.
  • காய்கறிகள் - கிலோகிராம்
  • துணி - மீட்டர்
  • பால் - லிட்டர்
  • காலம் - வினாடி
  • தூரம் - கிலோ மீட்டர்
இயற்பியல் அளவுகள்:
நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கனஅளவு போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும். இந்த இயற்பியல் அளவுகளை அளந்தறிய எண் மதிப்புகளும், அலகுகளும் பயன்படும்.
Example:
தினேஷ் தினந்தோறும் \(4\) கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். இந்நிகழ்வில் \(4\) என்பது எண் மதிப்பாகும். "கிலோ மீட்டர்" என்பது தொலைவு என்ற இயற்பியல் அளவின் மதிப்பினை குறிப்பதற்கு பயன்படும் அலகாகும்.
BeFunky-collage (1).png
பல்வேறு பொருட்களை அளவிட பயன்படும் சாதனங்கள்