PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும்.
- அடிப்படை அளவுகள்
- வழி அளவுகள்
அடிப்படை அளவுகள்
அடிப்படை அளவுகள் என்பது வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் ஆகும்.
Example:
நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கான சில உதாரணங்கள் ஆகும்.
அடிப்படை அலகுகள்:
நீளம், நிறை போன்ற அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.
Example:
நீளத்தின் அலகு மீட்டர் (\(m\)) மற்றும் நிறையின் அலகு கிலோகிராம் \(kg\) ஆகும்.
Important!
\(SI \) அலகு முறையில் ஏழு அடிப்படை அளவுகள் இருக்கிறது.
அடிப்படை அளவுகளும் அவற்றின் அலகுகளும் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
அடிப்படை அளவுகள் | அடிப்படை அலகுகள் |
நீளம் | மீட்டர் (மீ (அ) \(m)\) |
நிறை | கிலோகிராம் (கி.கி (அ) \(kg)\) |
காலம் | வினாடி \((s)\) |
வெப்பநிலை | கெல்வின் \((K)\) |
மின்னோட்டம் | ஆம்பியர் \((A)\) |
பொருளின் அளவு | மோல் \((mol)\) |
ஒளிச்செறிவு | கேண்டிலா \((cd)\) |
அடிப்படை அலகுகள் பற்றிய விளக்கப்படம்