
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபல தாவரங்களின் இலைகள் வாழும் சூழ்நிலைக்கேற்ப மற்றும் உணவு தேவைக்காக தங்களை மாற்றிக் கொண்டு வாழ்கின்றன. இலைகளின் மாற்றுருக்கள் நான்கு வகைப்படும்
- முட்கள்
- பற்றுக் கம்பிகள்
- இலைத் தொழில், இலைக்காம்பு (அல்லது) பில்லோடு
- கொல்லிகள்
i. முட்கள்
சில தாவரங்கள் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதி தண்டாகவும் ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் மாறியும் மற்றும் இலைகள் முட்களாக மாறியுள்ளன.

கள்ளி வகைகள்
ii. பற்றுக் கம்பிகள்
சில தாவர இலைகளின் பாகங்கள் நீண்ட பற்றுக் கம்பிகளாக (ஏறு கொடிகள்) மாறியுள்ளன.
- குளோரியோசா சூப்பர்பா (செங்காந்தள்) இலையின் நுனி பற்றுக் கம்பிகள்
- பைசம் சட்டைவம் (பட்டாணி) நுனிச் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகள்

பைசம் சட்டைவம் (பட்டாணி)
iii. இலைத் தொழில், இலைக்காம்பு (அல்லது) பில்லோடு
சில தாவரங்களில் இலை செய்ய வேண்டிய ஒளிச்சேர்க்கைப் பணியை இலைக்காம்பு செய்கிறது.

அகேஷியா ஆரிகுலிபார்மிஸ்
iv. கொல்லிகள்
நைட்ரஜன் என்ற ஊட்டச்சத்தை பெறுவதற்காக ஒரு சில தாவரத்தின் இலைகள் குடுவைகளாக மாறி, பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் கவர்ந்து உள்ளே இழுகின்றன. அதன் உட்பகுதியில் செரிமான நொதிகள் சுரக்கிறது. இது பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.

நெப்பன்தஸ்