PDF chapter test TRY NOW
சில தாவரங்களின் தண்டு உணவைச் சேமிப்பதற்காக தரைக்குக் கீழ் வளர்கின்றன. இத்தகைய தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும். இவை நான்கு வகைப்படும்.
i. மட்டநிலத் தண்டு (குறிப்பிட்ட வடிவம் இல்லை) - இத்தண்டு கணு மற்றும் கணுவிடை பகுதிகளில் தடித்தும் தரைக்குக் கீழ் கிடைமட்டமாக வளர்கின்றன. கணுவில் செதில் இலைகள் தோன்றும். இத்தண்டில் உள்ள மொட்டுகள் புதிய தாவரங்களை உருவாக்கும்.
மஞ்சள்
ii. கந்தம் (வட்ட வடிவம் ) - இத்தண்டின் மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக மற்றும் குறுகிய தண்டாகவும் காணப்படும். இதன் செதில் இலைகளின் கோணத்தில் ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றும். இதன் ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து புதிய தாவரங்களை உருவாக்குகின்றன.
சேப்பங்கிழங்கு
iii. கிழங்கு (கோள வடிவம்) - இத்தண்டு உணவைச் சேமிக்கும் அளவில் தரையின் கீழ் வளரும். இந்த தண்டின் செயலற்ற மொட்டுகளை (கண்கள் ) வெட்டி நடுவதன் மூலம் புதிய தாவரமாக வளரும்.
உருளைக் கிழங்கு
iv. குமிழம் (குறுகிய தட்டு வடிவம்) இரண்டு வகையான இலைகள் அவை:
- சதைப்பற்றுள்ள இலை - இதில் உணவைச் சேமிக்கிறது.
- செதில் இலை - குமிழத்தின் உள்ளே உள்ள எண்ணற்ற செதில் இலைகள் உணவைச் சேமிக்கின்றன.
வெங்காயம்