
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாவர உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலை எவ்வாறு மாற்றுருக்களாக செயல்படுகின்றன என்பதை காணலாம்.
மாற்றுரு என்பது ஒரு சில தாவரங்கள் தமக்கு தேவையான உணவை சேமித்து கொள்ளுதல், பாதுகாத்து கொள்ளுதல், ஆதாரமாகவும் மற்றும் பல முக்கியமான பணிகளைச் செய்வதற்கு தங்களின் உறுப்புகளான வேர் ,தண்டு மற்றும் இலையின் வடிவங்களையும், அமைப்பையும் மாற்றிக் கொள்கின்றன.
முதலில், வேரின் மூலம் ஏற்படும் மாற்றுருக்கள் பற்றிக் காணலாம்.
சேமிப்பு வேர்கள்
சில தாவரங்களில் சிறிய வேர்கள் இருப்பதற்குப் பதிலாக வேர்கள் தடித்தும், பருத்தும் காணப்படும். இவை உணவைச் சேமிக்கும் உறுப்புகளாக மாறியுள்ளன. அவை மூன்று வகையான சேமிப்பு வேர்கள் உள்ளன.
1. கதிர் வடிவ வேர் - மையத்தில் மட்டும் பருத்தும், மேலிருந்து கீழ்வரை சிறுத்தும் காணப்படும்.

முள்ளங்கி
2. பம்பர வடிவ வேர் - கீழ்ப்பகுதி பருத்து உருண்டை வடிவிலும் மேற்பகுதி சிறுத்தும் காணப்படும்.

டர்னிப் மற்றும் பீட்ரூட்
3. கூம்பு வடிவ வேர் - மேற்பகுதி பருத்தும் அடிப்பகுதி சிறுத்தும் காணப்படும்.

கேரட்
ஆதாரமளித்தல்
சில தாவரங்ககளுக்கு எண்ணற்ற வேர்கள் தேவைப்படும். இது போன்று, பல தாவரங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. தாவரங்கள் கூடுதல் ஆதாரத்திற்காக தனது தரைமேல் பாகங்களில் வேர்களை உருவாக்குகின்றன. இவ்வேர்கள் கீழ்நோக்கி வளர்ந்து தாவரத்தைத் தாங்கும் உறுப்புகளாக மாறுகின்றன.
1. தூண் வேர்கள் அல்லது (விழுதுகள்) - கிடைமட்டக் கிளைகளிலிருந்து தோன்றி செங்குத்தாகப் பூமியை நோக்கி வளரும்.

ஆலமரம்
2. முட்டு வேர்கள் - தண்டின் அடிப்பகுதியில் மற்றும் கணுக்களிலிருந்து கொத்தான வேர்கள் தோன்றும்.

கரும்பு மற்றும் மக்காச்சோளம்
3. பற்று வேர்கள் - கொடிகளில் கணு மற்றும் கணுவிடைப் பகுதியிலிருந்து வேர்கள் தோன்றும்.

வெற்றிலை மற்றும் மிளகு