PDF chapter test TRY NOW

தாவரங்களில் இரண்டு வகையான உறுப்புகள் உள்ளன. அவை,
  • தாவரங்களின் ஒரு பகுதியான வேர், தண்டு மற்றும் இலைகளைக் கொண்டது.
  • தாவரத்தின் இனப்பெருக்க உறுப்புகளான மலர்கள், கனிகள், மற்றும் விதைகள் ஆகும்.
நாம் இப்பாடத்தில் காணப்போவது தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பான மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதையும், எவ்வாறு, தாவரத்தின் வேர், தண்டு மற்றும் இலை ஆகியவை மாற்றுருக்களாக வளர்கின்றன என்பது பற்றியும் அறிந்து கொள்ளபோகிறோம்.
 
Shoots types.png
தாவரங்களின் மாற்றுருக்கள்
இனப்பெருக்கம்
உயிரினங்கள் தங்களின் இளம் உயிரிகளை உருவாக்கி எண்ணிக்கையை அதிகரிக்கும் நிகழ்விற்கு இனப்பெருக்கம் எனப்படும்.
இப்பகுதியில் நாம், தாவரங்களின் இனப்பெருக்கம் பற்றிக் காணலாம்.
 
12.png
தாவரங்களின் இனப்பெருக்கம்
 
தாவரங்களில் இனப்பெருக்கம் இரண்டு வகைப்படும். அவை,
  • பாலினப் பெருக்கம் - விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாக்குதல்.
  • பாலிலா இனப்பெருக்கம் - விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் உருவாக்குதல்.
பாலினப் பெருக்கம்
தாவரங்களின் மலர்கள் உருவாக்கும், விதைகள் மூலம் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் நிகழ்வுகள் நடைபெறும். இதுவே, பாலின இனப்பெருக்கம் எனப்படும்.
ஆகவே, மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும். ஒரு மலர் விதைகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் மலரின் பாகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மலரின் பாகங்கள்
மலரில் நான்கு பாகங்கள் உள்ளன. அவை, வட்டம் எனப்படும்.
  1. புல்லி வட்டம்
  2. அல்லி வட்டம்
  3. மகரந்தத் தாள் வட்டம்
  4. சூலக வட்டம்
1. புல்லி வட்டம்
 
இலை போன்ற பசுமை நிறமுடைய அமைப்பு ஆகும். இது, மொட்டினை முழுவதும் மூடி இருக்கும். இந்த அமைப்பில் உள்ள, தனித்தனி இதழ்களும் புல்லி இதழ்கள் எனப்படும்.
 
5 (2).png
பூவின் பாகங்கள்
 
2. அல்லி வட்டம்
 
மலரின் இதழ்கள் அல்லிகளாகும். இவை விதவிதமான அழகிய வண்ணங்களுடனும், இனிய நறுமணத்தோடும் மற்றும் பூச்சிகளை கவரக் கூடியதாக அமைப்பாக இருக்கும். இந்த அமைப்புக்கு அல்லி வட்டம் எனப்படும்.
 
3 (1).png
பூவின் பாகங்கள்
 
3. மகரந்தத் தாள் வட்டம்
மகரந்தத்தாள் வட்டம் அல்லது ஆண் இனப்பெருக்க வட்டம் (ஆண் கேமீட்) எனவும் அழைக்கப்படும்.
மகரந்தத்தாள்கள் இரண்டு பாகங்களைக் கொண்டது அவை,
  • மகரந்தக்கம்பி
  • மகரந்தப் பை
1 (1).png
மகரந்தத் தாள் வட்டத்தின் பாகங்கள்
ஒரு மலரின் மகரந்தப்பையை தொடும் போது தூள் போன்ற ஒரு பொருளை நாம் உணரலாம். இது மகரந்தத் தூள்கள் (ஆண் இனப்பெருக்க உறுப்பு) எனப்படும்.
3.png
மகரந்தத் தாள் வட்டத்தின் வகைகள்
  
4. சூலக வட்டம்
மகரந்தத்தாள் வட்டத்தில், நடுவில் இருப்பது பெண் இனப்பெருக்க உறுப்பு அல்லது சூலக வட்டம் அல்லது பெண் கேமீட் எனப்படும்.
  • இதன் அடிப்பகுதி பருத்துக் காணப்படும். இதில் விதைகள் உருவாகும் சூற்பை எனப்படும்.
  • சூற்பைக்கு மேலே மெல்லிய குழல் போன்ற பகுதி சூலகத் தண்டு ஆகும்.
  • சூலக முடி ஒட்டும் தன்மை கொண்டது. இது சூலகத் தண்டின் மேல் உள்ள பகுதி. இப்பகுதியில் மகரந்தத்தூள் அமருவது, மகரந்தச் சேர்க்கையின் இறுதி நிலை ஆகும்.
  • இறுதியில், சூலகத் தண்டின் வழியே, சூற்பையை மகரந்தத் தூள் அடைந்து, கருவுறுதல் நடைபெறுகிறது.
8 (1).png
சூலக வட்டத்தின் பாகங்கள்