PDF chapter test TRY NOW
முந்தைய வகுப்புகளில் அறிமுகப் பகுதியாக கணினிகள் மற்றும் கணினியின் பாகங்கள் பற்றி நாம் கற்றுள்ளோம். பொதுவாகவே கணினி என்றவுடன் கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி, மையச் செயலகம் போன்றவை மட்டுமே நமது நினைவுக்கு வரும்.
கணினித்திரை
விசைப்பலகை மற்றும் சுட்டி
அவற்றைத் தவிர சில வன்பொருள்களும் மென்பொருள்களும் கணினி இயங்குவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. இக்கணினியை நம் தேவைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இப்பொழுது அறிந்து கொள்வோம்.
நாம் ஏன் கணினியை நாடுகிறோம்?
அதிவேக செயல்திறன் மற்றும் தரவைச் சேமிக்கும் திறன் ஆகியவை பல்வேறு துறைகளில் கணினிகளை நாடுவதற்கான முக்கிய காரணங்களாகும். கணினிகள் மனித மூளையை விட வேகமாக வேலை செய்கின்றன; இதனால், அது மனித வேலைகளை குறைக்கிறது. கணினியில் பெரிய அளவிலான தரவுகளை சேமிக்க முடியும்,
கணினியில் எவ்வாறு நம் தரவு மற்றும் தகவல்களை சேமித்து வைப்பது?
தனிக் கோப்பு அல்லது பல கோப்புகளை உள்ளடங்கிய கோப்புத் தொகுப்பில் நமது செய்திகளைச் சேமித்து வைக்கலாம்.
கோப்பு (Files) மற்றும் கோப்புத் தொகுப்பு (Folder) பற்றி நாம் இந்த வகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.