PDF chapter test TRY NOW
கோப்பு (Files) மற்றும் கோப்புத் தொகுப்பு (Folder) பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கோப்பு:
கோப்பு என்பது கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ஆகும். ஆகவே, கோப்பின் தன்மை நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையைக் கொண்டே அமைகிறது.
கோப்பு
Example:
.JPEG or .JPG (Joint Photographic Experts Group)
.PNG (Portable Network Graphics)
.GIF (Graphics Interchange Format)
.PDF (Portable Document Format)
.SVG (Scalable Vector Graphics)
.PNG (Portable Network Graphics)
.GIF (Graphics Interchange Format)
.PDF (Portable Document Format)
.SVG (Scalable Vector Graphics)
.MP4 (Moving Picture Experts Group)
.DOC (Document)
.XLS (Microsoft EXCEL file extension)
.PPT (Power point presentation)
.PDF(Portable document form)
.EPS (Encapsulated Postscript)
.PSD (Photoshop Document)
.AVI (Audio video interleave)
கோப்புத்தொகுப்பு:
கோப்புத்தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றதாகும். தேவைக்கேற்ப கோப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமெனில் நூலகத்தில் உள்ள புத்தக அலமாரியை நாம் கருத்தில் கொள்வோம். அதிலுள்ள ஒரு தனித்த புத்தகம் என்பது கோப்பு என்றும், அனைத்து புத்தகங்களையும் கொண்ட அலமாரியை கோப்புத் தொகுப்பு என்றும் நாம் கூறலாம்.
கோப்புத்தொகுப்பு
ஒரு கோப்புத்தொகுப்பை எவ்வாறு உருவாக்குவது?
படி 1:
பொதுவாக சுட்டியின் வலது பொத்தானை அழுத்தியதும் கணினித் திரையில் பல்வேறு தெரிவுகள் தோன்றும்.
படி 2:
அதில் New என்பதைச் சொடுக்கினால் மேலும் பல தெரிவுகள் தோன்றும்.
படி 3:
அதில் Folder என்பதைச் சொடுக்கினால் புதிய Folder (கோப்புத்தொகுப்பு) நமது பயன்பாட்டிற்கு வந்துவிடும். இந்த கோப்புத்தொகுப்பில் நாம் உருவாக்கிய கோப்புகளை (File) விருப்பப்படி சேமித்து வைக்கலாம்.
கோப்புத்தொகுப்பை உருவாக்குதல்