PDF chapter test TRY NOW

படங்கள் பொதுவாக இரு வகைப்படும். அவை,
  • ராஸ்டர் மற்றும்
  • வெக்டர்
YCIND18052022_3715_Tamil_Screenshot_12.png
ராஸ்டர் மற்றும் வெக்டர்
 
ராஸ்டர் வரைகலை (Raster Graphics):
 
ராஸ்டர் வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட படம் (Image) அல்லது உருவத்தை கோப்பு அல்லது தரவு முறையில் அப்படியே பதிவு செய்யலாம்.
 
ராஸ்டர் (Raster Graphics) வரைகலைப் படங்கள் படப்புள்ளிகளை (Pixels) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை.
 
நிழற்படக் கருவி (Camera) மூலம் எடுக்கப்படும் படங்களும், வருடி (Scanner) மூலம் பெறப்படும் படங்களும் இவ்வகையைச் சார்ந்தவை.
 
இவ்வகைப் படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கும்போது அவை செவ்வக அடுக்குகளாகத் தெரியும்.
 
ராஸ்டர் கோப்பு வகைகள்:
  • .png (Portable Network Graphics)
  • .jpg or .jpeg (Joint Photographics Experts Group)
  • .gif (Graphics interchange Format)
  • .tiff (Tagged Image File Format)
  • .psd (Photoshop Document)
அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop) எனும் மென்பொருள் ராஸ்டர் வரைகலைப் படங்களை Edit செய்ய பயன்படுகிறது.