
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பாடத்தை பேசியும், கரும்பலகை அல்லது வெள்ளை பலகையில் எழுதியும் நமக்குப் புரிய வைப்பதைவிட புகைப்படங்கள், ஒலிஒளிப் படங்கள் மூலம் புரிய வைப்பது மிகவும் எளிதாக இருக்கும் அல்லவா ?

வெள்ளை பலகையைப் பயன்படுத்தி கற்பித்தல்

ஒலிஒளிப் படங்கள் மூலம் கற்பித்தல்
’ஒரு ஊர்ல ஒரு ராஜா’ என்று சொல்லப்படும் கதையை விட, காணொளி ஒரு கருத்தை எளிதாகப் புரிய வைத்து விடுகிறது. மேலும், மாணவர்களின் மனதில் அக்காட்சி அப்படியே பதிந்து விடுகிறது.
படங்கள் வழியாகக் குறிப்பிட்ட கருத்தினை நமக்கு எளிதில் புரிய வைப்பவையே ’காட்சித் தொடர்பு சாதனங்கள்’ எனப்படுகின்றன.

உதாரணமாக, நிழற்படங்கள், ஒலிஒளிப் படங்கள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்கள் போன்ற அனைத்தையும் கணினியின் உதவியுடன் எளிதாக உருவாக்க முடியும்.
Example:
காட்சித் தொடர்பு சாதனத்திற்கு, திரைப்படம் சிறந்த சான்றாகும்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/40/Presentation_.jpg
https://pxhere.com/en/photo/911464