
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவிழாக்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை, புகைப்படக்காரர் ஆல்பமாகச் செய்து கொடுப்பதனை நாம் அனைவரும் பார்த்து ரசித்திருப்போம் அல்லவா?
புகைப்படங்களை அழகுபடுத்தவும், அதில் மாறுதல்களைச் செய்யவும் புகைப்படக்காரர்கள் போட்டோஷாப் (Photoshop) எனும் மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறு, புகைப்படங்களைக் கொண்டு படத்தொகுப்பினை மட்டும்தான் செய்ய முடியுமா? வேறு என்ன செய்ய முடியும்?
படக்கதைகளை உருவாக்க முடியும். ஆம், நம்மிடம் உள்ள படங்களைக் கொண்டு கதைகளைக்கூட நாம் உருவாக்க முடியும்.

இது போன்ற படக்கதைகளை நாம் கீழ் வகுப்புகளில் படித்திருப்போம். குழந்தைகள் புத்தகத்தில் உள்ள எழுத்துகளைப் படித்து புரிந்து கொள்வதை விட படக்கதைகளைக் கொண்டு எளிதில் கருத்துகளைப் புரிந்து கொள்கின்றனர்.
இம்மாதிரியான படக்கதைகளை மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி எனும் மென்பொருள் மூலம் எளிதில் காணொளியாக (VIDEO) மாற்றி விடலாம்.
