PDF chapter test TRY NOW
மனித உடல் உயிரணுக்களால் ஆனது, உயிரணுக்கள் திசுக்களை உருவாக்குகின்றன, திசுக்கள் உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளை உருவாக்குகின்றன. உறுப்பு அமைப்புகள் உடலின் உடலியல் செயல்பாடுகளைச் செய்கின்றன.
உதாரணமாக, செரிமான அமைப்பு வயிறு மற்றும் குடல்களால் ஆனது, அவை உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
செரிமான அமைப்பு
உடலின் தசைக்கூட்டு அமைப்பு எலும்புகள் மற்றும் தசைகளால் ஆனது. அவை உடல் உறுப்புகளை ஒன்றாக இணைத்து உடலை நகர்த்த உதவுகிறது.
தசைக்கூட்டு அமைப்பு
ஒரு மனிதன் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவனுடைய உறுப்புகளின் செயலிழப்பின்மை மற்றும் கண்களுக்குப் புலப்படும் சில அறிகுறிகள் மூலம் அவன் சாதாரண நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த அறிகுறிகள் அவன் உடலில் பிரச்சனை உள்ளது என்பதை நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தும்.
பொதுவாகக் காய்ச்சல், உடல்வலி, சளி, வாந்தி மற்றும் பலவிதமான நோய்களால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நோயை உண்டாக்கும் காரணிகள், முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, போன்ற பல்வேறு காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன.
நோய் என்ற சொல்லைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.
சாதாரணமாக நல்ல நிலையில் உடல் உறுப்புகள் செயல் பட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதருக்கு அசாதாரண நிலையை உருவாக்கி, அவருடைய உடல் நலத்தைப் பாதிக்கும் ஒரு உடல் ரீதியான மாற்றமே நோய் எனப்படும்.
நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஒரு நபருக்கு நோய் ஏற்பட நான்கு மிக முக்கிய காரணங்கள் இருக்கின்றன அவையாவன
- நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகள்.
- சமச்சீர் உணவு இல்லாமை.
- மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள்.
- உடல் பாகங்கள் மற்றும் உடல் உறுப்புகளின் செயலிழப்பு
நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி?
சரியான சமச்சீர் உணவு, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிப்பதன் மூலம் ஒரு நபர் நோய்களிலிருந்து விலகி நல்ல ஆரோக்கியத்துடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நோய்களின் வகைகள்:
நோய்த் தடுப்பு, சிகிச்சை முறைகளைப் பொறுத்து நோய்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன.
- தொற்று நோய்கள்
- தொற்றா நோய்கள்