PDF chapter test TRY NOW
ஒரு நபரின், பொதுவான உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை நாம் அவருடைய தலைமுடியின் ஆரோக்கிய நிலை மூலம் ஓரளவு கணிக்கலாம். மெல்லிய, சிதறிய கூந்தல் முடி, முடி உதிர்தல் போன்ற முடியின் நிலைகள் நமக்கு மறைமுகமாக உடலிலுள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டு நிலையை எடுத்துரைக்கிறது. மேலும், பல்வேறு வகையான உடல் மற்றும் மன நோய்களால் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் இளம் வயதுடையவர்களுக்குக் கூட முடி நரைத்து இளநரைக்கு வழிவகுக்கின்றன.
முடி வளருமிடம் மயிர்க்கால்களாகும். இவை எண்ணைய்யை உற்பத்தி செய்து தலைமுடியை மென்மையாய், சீராகப் பராமரிப்பதற்கு உதவுகிறது. இறந்த சரும செல்களும் மற்றும் வியர்வை சுரப்பிகளும் உச்சந்தலையிலிருந்து வெளியேறி விடும். எண்ணெய், வியர்வை மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் சேர்ந்து தலை முடியை அழுக்காக மாற்றி விடும் என்பதால் நாம் முறையாகத் தலைமுடியை, கழுவி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது மிக அவசியம்.
- நாம் முடியைச் சுத்தமான நீரில் கழுவி, உச்சந்தலையிலுள்ள அழுக்குகளைத் தேய்த்துக் குளிப்பதை பழக்கபடுத்தும் போது, ஏற்கெனவே இறந்த சரும செல்கள், அதிகப்படியாய் சுரக்கப் பட்ட எண்ணெய் மற்றும் தூசி முதலியவற்றை எளிதாக அகற்றலாம்.
தலைமுடிக்கு எண்ணெய் தடவுதல்
- வாரத்திற்கு ஒரு முறையாவது, தலைமுடிக்கு நல்ல முறையில் எண்ணெய் தடவி தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தலைக்கு உபயோகப் படுத்தும் எண்ணெய்
- சிகையலங்காரத்திற்குத் தரமான நல்ல சீப்புக்களைப் பயன்படுத்த வேண்டும், இவை தலைமுடியைச் சீராகப் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
பல் சீப்பு
- முடியின் தன்மைக்கு கேடு விளைவிக்கும் அதிக வெப்பத்தை உருவாக்கும் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.
அதிக வெப்பத்தை உருவாக்கும் சிகை அலங்கார கருவிகள்