PDF chapter test TRY NOW
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களின் குழு ஒரு சமூகத்தை உருவாக்குகிறது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களின் குழு
ஒரு சமூகத்தின் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அடிப்படை சமூக சுகாதாரத்தைப் பராமரிப்பது கட்டாயமாகும். பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சமூக சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.
- சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- வடிகால்களை முறையாக மூடி பராமரிக்க வேண்டும்.
- வீட்டுக் கழிவுகளை முறையாகப் பிரித்து, அரசால் வழங்கப்படும் தனித்தனி குப்பைத் தொட்டிகளான பச்சை மற்றும் நீல நிற தொட்டிகளில் மக்கும் மற்றும் மக்காக் குப்பைகளை பிரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் .
- வீடுகளில் பயன்படுத்தப்பட்ட நீரை, வாய்க்கால் மற்றும் திறந்த பகுதிகளில் வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
டெங்கு
பரவுவதற்கான காரணம்
டெங்கு, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. மேலும், இவ்வகை காய்ச்சல் பிலெவி வைரஸ் வகையைச் சேர்ந்த \(DEN- 1,2\) வைரஸால் ஏற்படுகிறது. மூட்டுகளிலும், தசை நார்களிலும் கடுமையான வலியை ஏற்படுத்துவதால் இதற்கு எலும்பு முறிப்பு காய்ச்சல் என்ற பெயரும் உண்டு.
ஏடிஸ் எஜிப்டி வகை கொசு
இந்த வைரஸ் மனித இரத்தத்தில் காணப்படும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. நோயைப் பரப்பும் கொசுக்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக \(50 - 100\) மீட்டர் சுற்றளவு வரை வசிக்கும் மக்களுக்கு டெங்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அறிகுறிகள்
காய்ச்சல், வாந்தி, கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, தசை நார் மற்றும் மூட்டுகளில் வலி, அரிப்பு மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைவு படுதல் போன்றவை டெங்குவோடு தொடர்புடைய அறிகுறிகளாகும்.
டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள்
- கொசுக் கடிப்பதைத் தவிர்க்கக் கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
- டெங்குவுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும்.
- வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
டெங்கு தடுப்பு முறைகள்
சிகிச்சை
டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. பொதுவாக, வலி நிவாரணியான பாராசிட்டாமால் காய்ச்சலையும் உடல் வலியையும் குறைக்க கொடுக்கப்படுகின்றன. முழுமையான ஓய்வு மற்றும் சத்தான உணவு உட்கொள்ளுதல் மிக அவசியம்.