PDF chapter test TRY NOW
உடல் பராமரிப்புபற்கள் பராமரிப்பு
மனிதனுடைய உடலமைப்பு அதிசயமானது. மனித உடல் 24 மணி நேரமும் செயல்படும் உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதை நாம் ஒரு இயந்திரத்துடன் ஒப்பிடலாம் அதனால் இவை சரியான பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் சிறப்பாகப் பழுதின்றி வேலை செய்ய வேண்டும். உடலின் சீரான செயல்பாட்டிற்கு, அதன் அனைத்து உறுப்புகளும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். நம் உடலில் காணப்படும் செரிமான மண்டலம், தசை மண்டலம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் போன்றவை உடலின் முக்கிய அமைப்புகளாகும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அப்பொழுது தான் உடலின் எல்லா பணிகளும் தங்கு தடையின்றி செயல்பட முடியும். இதன் காரணமாக, உடலைச் சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்.
பல் பராமரிப்பு அல்லது வாய் சுகாதாரம் ஒரு நபரின் ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாகும்.
பல் கோளாறுகளைத் தடுக்க வாய் மற்றும் பற்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிறந்த வாய் சுகாதாரம் என்பது ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளைக் குறிக்கிறது.
ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள்
நாம் உணவை வாய் வழியாய் அரைத்து உட்கொள்ளுவது ஒரு உடல் செயல்பாடு. அவ்வாறு உணவை மெல்லும் போது சுரக்கும் உமிழ்நீர் மற்றும் செரிமான சுரப்புகள் உட்கொள்ளப்பட்ட உணவைச் செரிக்க வைக்க உதவுகின்றன.
உணவை அரைக்கும், மெல்லும் மற்றும் சுவைக்கும் முறை மாஸ்டிகேஷன் (mastication) என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறை, நாம் சாப்பிடும் போது நமக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருகிறது.
நல்ல தோற்றத்தையும், தெளிவான பேச்சையும் வழங்குவதில் பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, வாய்வழி சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சரியான வாய்வழி சுகாதாரம் இல்லாததால், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்கள் போன்ற வாய்வழி தொற்றுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறது.
வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில நடவடிக்கைகள் பின்வருமாறு:
- நாளொன்றுக்கு இரண்டு வேளை பல் துலக்குவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்க முடியும்.
பெண் குழந்தை பல் துலக்கும் காட்சி
- ஃப்ளோசிங் முறை, சாப்பாட்டில் உள்ள சிறு உணவு துகள்கள், பற்காரை, பாக்டீரியாக்கள் நீங்க உதவி செய்கின்றன. தொடக்கத்தில் நீங்கள் ஃப்ளோசிங் செய்யும் போது ஈறுகளில் சிறிது இரத்தம் கசியலாம் ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இரத்தம் கசிவது நின்று விடும். எனவே சரியான மருத்துவ வழிகாட்டுதலுடன் மட்டுமே இந்த முறையைச் செய்ய வேண்டும்.
பல் ஃப்ளோசிங்
Important!
பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும் நோய்கள், அவற்றின் காரணமான காரணிகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்து அடுத்த கோட்பாட்டில் விளக்கப்பட்டுள்ளன.