PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமருத்துவ உதவி கிடைக்கும் முன் அதிர்ச்சி அல்லது திடீர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் உடனடி சிகிச்சை முதலுதவி எனப்படும்.
காயம் பட்டவர் கையில் முதலுதவி செய்வதைக் காண்பிக்கும் படம்
முதலுதவியின் சிறப்பியல்புகள்
- உயிரைப் பாதுகாக்கும்.
- இரத்தபோக்கு ஏற்படுவதைத் தடுக்கும்.
- ஒரு தனிநபரின் நிலையை உறுதிப்படுத்தும்.
- நோயின் ஆரம்ப நிலைக்கான மருத்துவ சேவையை வழங்கும்.
முதலுதவி செய்வதற்குத் தேவைப்படும் பொருள்கள்
தீக்காயங்கள்
வெப்பம், இரசாயனங்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர்கள் ஆகியவற்றால் ஏற்படும் திசுக்களின் சேதம் தீக்காயங்கள் எனப்படும்.
கையில் தீக்காயம் இருப்பதைக் காட்டும் படம்
பொதுவாகத் தீக்காயங்கள் பெரும்பாலும் வெந்து போதல், கட்டிட தீ, எரியக்கூடிய திரவங்கள் மற்றும் வாயுக்கள் காரணமாக ஏற்படுகிறது.
தீ பாதிப்பின் அளவைப் பொறுத்து, தீக்காயங்கள் மூன்று வகைகளாகும். அவை,
- முதல் நிலை தீக்காயங்கள்
- இரண்டாம் நிலை தீக்காயங்கள்
- மூன்றாம் நிலை தீக்காயங்களாகும்
தீக்காயங்களின் வகைகள்
தோலின் வெளிப்புற அடுக்கை (மேற்புறத் தோல்) மட்டும் பாதிக்கும் தீக்காயங்கள் முதல் நிலை தீக்காயங்கள் எனப்படும்.
- மேற்புறத் தோல் மற்றும் அதன் கீழே உள்ள உட்புற தோலடுக்கான டெர்மிஸை பாதிக்கும் தீக்காயங்கள் இரண்டாம் நிலை தீக்காயங்கள் எனப்படும்.
- தோலின் முழு ஆழம் வரை சேதப்படுத்தி அதனை அழித்தும் அதில் உள்ள அடிப்படைத் திசுக்களைச் சிதைக்கும் நிலையை மூன்றாம் நிலை தீக்காயங்கள் என்கிறோம்.
மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் (skin grafting) தேவைப்படும். இந்நிலையில், தீக்காயங்கள் இரத்த குழாய்களைச் சேதப் படுத்தும்போது திரவ இழப்பு ஏற்பட்டு வீக்கம் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன.
தீக்காயங்களின் பாதிப்பு நிலைகள்
தீக்காயங்களுக்கு முதலுதவி
தீக்காயங்கள் சிறியதாக இருந்தால், அவ்விடத்தை முதலில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், பின்பு கிருமி நாசினிக் களிம்பு பயன்படுத்தப்பட வேண்டும். தீக்காயங்கள் கடுமையாக இருந்தால், திசுக்களின் ஆழமான அடுக்குகள் அழிக்கப்பட்டு, கொப்புளங்கள் தோன்றினால், அந்த பகுதிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட இடத்தை ஒட்டாத மற்றும் சுத்தமாக இருக்கும் துணி மற்றும் கட்டுத்துணிகளால் மூடி வைக்க வேண்டும். தீக்காயங்களின் அளவு மிகப் பெரியதாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். எப்பொழுதும் தீயை அணைக்கும் கருவியான தீயணைப்பான்களை தயார் நிலையில் வைத்திருத்தல் மிகவும் அவசியம்.