PDF chapter test TRY NOW
இரத்த சிவப்பணுக்களின் மொத்த எண்ணிக்கை குறைவதையே இரத்த சோகை என்று அழைக்கிறோம்.
இது இரும்புச் சத்து குறைவாக உள்ள உணவு வகைகளை உட்கொள்வதாலும் மற்றும் தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு சில உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதாலும் ஏற்படும் நிலையாகும். தீவிர இரத்த சோகையினால் பாதிக்கப்படும் இளம் குழந்தைகளுக்குக் கொக்கிப்புழு தொற்று, நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற பிற பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமீபகாலமாகப் பள்ளி செல்லும் குழந்தைகளில், பெண் குழந்தைகள் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பள்ளிச் செல்லும் மாணவிகளுக்கும் வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.
இரத்த சோகையின் காரணம்
இரத்த சோகையின் அறிகுறிகள்
- வெளிர் அல்லது எளிதில் தெரியும் தோல்
- வெளித்த கண்ணிமையின் உள்பரப்பு
- வெளுத்துப் போன விரல் நகங்கள்
- வெளிர்ந்த ஈறுகள்
இரத்த சோகையின் அறிகுறிகள்
- சோர்வு மற்றும் பலவீனம்.
- நோயின் நிலை தீவிரமடையும் போது முகம் மற்றும் கால்கள் வீக்கமடையும்
- வேகமான இதயத் துடிப்பு
- மூச்சுத் திணறல்
- மண்ணை உண்ணும் பழக்கமுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் பொதுவாக இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்.
இரத்த சோகையின் காரணமாக வெளுத்தக் கைவிரல்கள்
இரத்த சோகைக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு
இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
உணவுகள்
முருங்கைக் கீரை, பேரீச்சம்பழம், பச்சைக் காய்கறிகள், கல்லீரல் (ஆடு மற்றும் கோழி), கீரைகள், பட்டாணி, பீன்ஸ் மற்றும் பச்சை வாழைப்பழங்கள்
மாத்திரைகள்
மீன் எண்ணெய் மாத்திரைகள் மற்றும் இரும்பு சல்பேட்.