PDF chapter test TRY NOW
காலரா
நோய்க் காரணி
காலரா, விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

விப்ரியோ காலரே
நோய் பரவும் முறை
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் காலரா பரவுகிறது.
அறிகுறிகள்
- வாந்தி
- கடுமையான வயிற்றுப்போக்கு,
- தசை வலி

காலராவின் அறிகுறிகள்
தடுப்பு மற்றும் சிகிச்சை
கீழ்க்காணும் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் காலரா பரவுவதைத் தடுக்கலாம்.
- சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
- நல்ல சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- தெரு வியாபாரிகளிடமிருந்து மூடப்படாத உணவை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
- காலராவிற்கு எதிராகத் தடுப்பூசி போடுதல் வேண்டும்.
- அவ்வப்போது சோப்பு மற்றும் பாதுகாப்பான நீரால் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
டைபாய்டு
நோய்க் காரணி
டைபாய்டு, சால்மோனெல்லா டைபி என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

சால்மோனெல்லா டைபி
நோய் பரவும் முறை
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் டைபாய்டு காய்ச்சல் பரவுகின்றன.
அறிகுறிகள்
- பசியின்மை
- தலைவலி
- அடிவயிற்றில் தடிப்புகள் மற்றும் புண்,
- வயிற்றுப்போக்கு
- \(104 °F\) வரை அதி தீவிரக் காய்ச்சல்

டைபாய்டு அறிகுறிகள்
தடுப்பு மற்றும் சிகிச்சை
கீழ்க்காணும் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் டைபாய்டு நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
- கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும் .
- கழிவுநீரை முறையாக வெளியேற்ற வேண்டும்.
- சமைக்கப்படாத உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- டைபாய்டு நோய்க்கு முறையாகத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.