PDF chapter test TRY NOW
இக்கோட்பாட்டில் வைரஸ்களால் ஏற்படும் சில தொற்று நோய்களான மஞ்சள் காமாலை மற்றும் சின்னம்மை ஆகியவை பற்றி அறிந்து கொள்வோம்.
மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்)
நோய்க் காரணி
ஹெபாடிட்டிஸ் ஏ, பி, சி மற்றும் டி வைரஸ்களால் ஏற்படும் மிகவும் ஆபத்தான இறப்பினை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்று மஞ்சள் காமாலையாகும்.
ஹெபாடிட்டிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கல்லீரல்
நோய் பரவும் முறை
அசுத்தமான தண்ணீரை அருந்துவது, நோயினால் பாதிக்கப் பட்ட நபருக்குப் போடப்பட்ட ஊசிகளைப் பகிர்வது மற்றும் பாதிக்கப்பட்ட மனிதரின் இரத்தத்தை ஆரோக்கியமான மற்றொருவருக்குச் செலுத்துவதன் மூலமாக இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
அறிகுறிகள்
- பசியின்மை (அனோரெக்ஸியா)
- வாந்தி
- கண்கள் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை சில அறிகுறிகளாகும்.
ஹெபாடிட்டிஸின் அறிகுறிகள்
தடுப்பு மற்றும் சிகிச்சை
கீழ்க்காணும் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
- கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும்.
- எப்பொழுதும் முறையாக கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
- தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.
தட்டம்மை
தட்டம்மை நோய் 'வாரிசெல்லா' என்றும் அழைக்கப்படுகிறது.
நோய்க் காரணி
தட்டம்மை வரிசெல்லா ஜோஸ்டர் வகை வைரஸால் ஏற்படும் மிகவும்த் தீவிர தொற்று நோயாகும்.
வரிசெல்லா ஜோஸ்டர்
நோய் பரவும் முறை
இவ்வகை நோய் காற்றின் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் எளிதாகப் பரவுகின்றன.
அறிகுறிகள்
- உடல் முழுவதும் தடிப்புகள் இருப்பது
- காய்ச்சல்
- அம்மை கொப்பளங்கள் போன்றவை இந்நோயின் சில அறிகுறிகளாகும்.
தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்
தடுப்பு மற்றும் சிகிச்சை
கீழ்க்காணும் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் தட்டம்மை நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
- பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
- சின்னம்மை தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை (வாரிசெல்லா) தடுப்பூசி போடுவதாகும்.