PDF chapter test TRY NOW
ரேபிஸ் என்றால் என்ன?
ரேபிஸ் என்பது இறப்பினை ஏற்படுத்தும் அபாயமுள்ள கொடிய வைரஸ் நோயாகும், வெறிநாய் கடி எனவும் இதனை அழைப்பர்.

ரேபிஸ் வைரஸ் பரவும் முறை
ரேபிஸ் நோய், பொதுவாகப் பாதிக்கப்பட்ட நாய், முயல், குரங்கு, பூனை கடிப்பதன் மூலமாகப் பரவுகிறது. மேலும், நாய்கள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் உள்ள வைரஸ்கள் நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைவதன் மூலமும் இந்நோய் பரவுகிறது.

ரேபிஸ் பரவும் விதம்
அறிகுறிகள்
- ஹைட்ரோபோபியா (தண்ணீரைக் கண்டு அதீத பயம்).
- \(2\) முதல் \(12\) வாரங்கள் வரை நீடிக்கும் வலியுடன் கூடிய காய்ச்சல்.
- நடத்தையில் மாற்றம்.
தடுப்பு மற்றும் சிகிச்சை
- விலங்கு கடித்த உடன் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும். அதன் பின்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
- பொதுவாக, வெறிநாய்கடி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகக் கடினம்.
- ஒரு விலங்கு கடித்தால், அறிகுறிகள் தோன்றுவதற்கு பொதுவாக \(2\) முதல் \(12\) வாரங்கள் ஆகும். சில சமயங்களில் இரண்டு வருடங்கள் கூட ஆகலாம்.
- அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் சரியான நேரத்தில் நோய்க்கு எதிரான தடுப்பூசி போடுவதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம்.