PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகண்களைப் பாதிக்கும் சில நோய்கள் மற்றும் அவற்றின் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இரவு குருட்டுத்தன்மை (Night Blindness)
நோய் காரணி
இந்நோய் வைட்டமின் ஏ குறைபாடு மற்றும் விழித்திரையில் உள்ள செல்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது.
விளைவுகள்
இவ்வகை நோய் தாக்கம் இருக்கும் நபர்களுக்கு இரவு நேரம் அல்லது மங்கலான வெளிச்சத்தில் பார்ப்பது கடினமாக இருக்கும்.
தீர்வுகள்
இரவு குருட்டுத்தன்மை நோய் வருவதைத் தவிர்க்க, ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ குறைபாடு இரவில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது
இளம் சிவப்புக் கண் நோய் (அ) விழி வெண்படல அழற்சி (Conjunctivitis)
நோய் காரணி
இந்நோய் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.
விளைவுகள்
இவ்வகை தொற்று நோயால் ஒன்று அல்லது இரண்டு கண்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, மேலும், இவை இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகின்றன.
தீர்வுகள்
நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட கண் சொட்டு மருந்துகள் அல்லது களிம்புகள் மற்றும் சில பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும்.
இளம் சிவப்புக் கண் நோய்
வண்ணக் குருட்டுத் தன்மை (Colorblindness)
வண்ண குருட்டுத்தன்மைக்கு பொதுவாகக் காரணமாய் இருப்பது மரபணு நிலையாகும்.
விளைவுகள்
இவ்வகை நோயால் , பாதிக்கப்பட்ட நபரால் நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது, அது மட்டுமல்லாமல், ஒரே நிறத்தின் வெவ்வேறு செறிவுகளையும் இவர்களால் கண்டுபிடிக்க இயலாது.
தீர்வுகள்
இந்த நோய்க்கென்று இதுவரை எந்த சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் வடிகட்டிகளுடன் கூடிய கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
வண்ண குருட்டுத்தன்மை