PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாத நோய்கள் தொற்றாத நோய்கள் எனப்படும். நுண்ணுயிரிகள் இந்த நோய்களை ஒருபோதும் ஏற்படுத்தாது, எனவே நுண்ணுயிர் எதிர் பொருள்கள்  அல்லது நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் மருந்துகள் இந்த நோய்களைக் குணப்படுத்த உதவாது.
நோய்கள் மற்றும் அவற்றின் காரணிகள்
1. உடல் உறுப்புகள் தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள்
 
வாத நோய், மாரடைப்பு, வலிப்பு, பக்கவாதம், கண்புரை, ஒற்றைத் தலைவலி மற்றும் புற்றுநோய் ஆகியவை உடல் பாகங்கள் பழுதடைவதால் ஏற்படும்
பிரச்சினைகளாகும்.

2. உடலுக்குள் நுழையும் வெளிப்புற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள்
 
ஒவ்வாமை, ஆஸ்துமா, நஞ்சு , பாம்புக்கடி, புகைப்பழக்கத்தால் ஏற்படும் இருமல், மதுப்பழக்கம், வயிற்றுப்புண் போன்றவை உடலுக்குள் நுழையும் வெளிப்புற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகளாகும்.
 
3. உடல் நுண்ணூட்டத் தனிமக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள்
 
இரத்த சோகை, பெலாக்ரா, இரவு குருட்டுத்தன்மை, சீரோஃப்தால்மியா, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் கழுத்துக்கழலை நோய் ஆகியவை உடலில் உள்ள நுண்ணூட்டத் தனிமக் குறைபாட்டால் ஏற்படும் சில பிரச்சனைகளாகும்.

4. ஊட்டச்சத்துக்  குறைபாடு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள்
 
ஒரு நபர் நன்றாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும், கடினமாக உழைக்கவும், சத்தான உணவை உட்கொள்வது மிக அவசியமாகும். ஒரு நபருக்குச் சத்தான உணவு கிடைக்காத போது  ஊட்டச்சத்துக்  குறைபாடு ஏற்படுகிறது, இதன் காரணமாகப் பல பொதுவான நோய்கள் ஏற்படுகின்றன.

குழந்தைப் பருவத்தில் புரதம் மற்றும் ஆற்றல் குறைபாடு காரணமாக குவாஷியோர்கர், மராஸ்மஸ் மற்றும் இரத்த சோகை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
லுகோடெர்மா
நமது தோலில் மெலனின் எனப்படும் நிறமி உள்ளது. லுகோடெர்மா என்பது தோலிலுள்ள மெலனின் நிறமியின் சில பகுதி அல்லது மொத்த இழப்பால் ஏற்படும் தொற்றாத நோயாகும். இந்த நிலை எந்த வயதினருக்கும், பாலினத்திற்கும், இனத்திற்கும் பொதுவானது மற்றும் இதற்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. இது தொற்றாத நோய் என்பதால், தொடுதல் , ஒன்றாக அமர்தல், கைகுலுக்கல் போன்றவற்றின் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.
 
shutterstock_33211057.jpg
லுகோடெர்மாவால் பாதிக்கப்பட்ட கால்கள்