PDF chapter test TRY NOW

தாம்சன் அணுக்கொள்கையை எர்னஸ்ட் ருதர்போர்ட் மேம்படுத்தினார். ஒரு சோதனையின் மூலம் இதற்கான ஒரு புரிதலை ஏற்படுத்தினார்.
 
shutterstock1113317699.jpg
எர்னஸ்ட் ருதர்போர்ட்
 
  • மிக மெல்லிய தங்க தகட்டின் மீது நேர் மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை மோதச் செய்தார்.
  • பெரும்பான்மையான கதிர்கள் எந்த தடையும் இன்றி தங்க தாகட்டினை ஊடுருவி சென்றன.
  • சில கதிர்கள் தங்க தகட்டின் மீது மோதி எதிர் திசையில் பின்னோக்கி வந்தன. இந்நிகழ்வு, ஒரு மெல்லிய காகிதத்தின் மீது துப்பாக்கி குண்டு மோதி எதிர் திசையில் பின்னோக்கி வருவதற்கு இணையானது என்றார் ருதர்போர்ட்.
  •  
    shutterstock711798079.jpg
    ருதர்போர்ட் சோதனை அமைப்பு
      
    ருதர்போர்ட் மேற்கொண்ட சோதனையின் முடிவுகள்
    1. பெரும்பான்மையான கதிர்கள் எந்த தடையும் இன்றி தங்க தாகட்டினை ஊடுருவி செல்கிறது என்றால் அணுவில் பெரும்பான்மையாக வெற்றிடமகா இருக்க வேண்டும். 
    2. கதிர்கள் எந்த பகுதியில் மோதி எதிர் திசையில் பின்னோக்கி வந்தனவோ அந்த பகுதி நேர்  மின்னூட்டம் கொண்டதாக இருக்க வேண்டும். வெற்றிடத்தை ஒப்பிடும் போது அந்த பகுதியின் அளவு மிகச் சிறியதாக இருக்க வேண்டும்.
    YCIND_220518_3667_2.png
    ஆரம்ப கால அணு மாதிரி
     
    சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் ருதர்போர்ட் உருவாக்கிய அணுக்கொள்கைக்காக \(1908\) ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
    ருதர்போர்ட் அணுக்கொள்கை
    • அணுவின் மையத்திலுள்ள அணுக்கருவானதுநேர்  மின்னூட்டம் கொண்டது. அதிக அளவிலான நிறை அணுவின் மையத்திலுள்ளது.
    • எதிர் மின்னூட்டங்கள் கொண்ட எலக்ட்ரான்கள் அணுக்கருவை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
    • அணுவோடு ஒப்பிடும் போது அணுக்கருவின் அளவு மிகச் சிறியது.
    Important!
    ஒவ்வொரு வருடமும் நமது உடலில் 98% செல்கள் இறந்து புது செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. நமது உடலில் ஏறத்தாழ ஏழு பில்லியன் செல்கள் காணப்படுகின்றன.