PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம் அனைத்து தனிமங்களின் அணுக்களும் அணுக்கூறுகளால் ஆனவை என்று அறிந்தனர்.
- புரோட்டான் , எலக்ட்ரான், மற்றும் நியூட்ரான் ஆகிய இத்துகள்கள் அணுக்கூறுகளாகும்.
- ஒரு அணுவினை உருவாக்கும் இத்துகள்கள் அணுவின் அடிப்படை துகள்கள் ஆகும்.
- அனைத்து தனிமங்களின் புரோட்டான் , எலக்ட்ரான், மற்றும் நியூட்ரான்களும் ஒரே மாறியான பண்புகள் கொண்டதாகும். அதாவது, கார்பன் அணுவின் எலக்ட்ரானுக்கும், ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரானுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
புரோட்டான்
- கோல்ஸ்டீன் புரோட்டானை கண்டறிந்தார்.
- இவை அணுக்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
- இவற்றின் மின்சுமை \(+1\). இவற்றின் நேர் மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரானின் எதிர் மின்னூட்டத்தின் மதிப்புற்கு இணையாது ஆகும்.
- இவற்றின் குறியீடு p.
- நிறை = கி.கி
நியூட்ரான்
- ஜேம்ஸ் சாட்விக் கண்டறிந்தார்.
- இவை அணுக்கருவில் உள்ள மின்சுமையற்ற துகள்கள் ஆகும்.
- இவற்றின் மின்சுமை \(0\).
- ஹைட்ரஜன் தவிர்த்து அனைத்து தனிமங்களின் அணுக்கருவிலும் காணப்படுகிறது.
- இவற்றின் குறியீடு n.
- நிறை = கி.கி
- அணுக்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களை மொத்தமாக நியூக்ளியான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான்
- சர் ஜான் ஜோஸப் தாம்ஸன் கண்டறிந்தார்.
- இவை அணுக்கருவை ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைகளில் சுற்றி வரும் எதிர் மின்னூட்டம் கொண்ட துகள்களாகும்.
- இவற்றின் மின்சுமை \(-1\).
- இவற்றின் குறியீடு e.
- நிறை = கி.கி
- புரோட்டான் மற்றும் நியூட்ரானின் நிறையுடன் ஒப்பிடும்போது ஒரு எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்க அளவில் உள்ளது.
- அணுவின் நிறை புரோட்டான் மற்றும் நியூட்ரான்களை மட்டுமே சார்ந்து உள்ளது.
- அணுக்கருவை சுற்றி வரும் எலக்ட்ராகளின் மொத்த எதிர் மின்னூட்டம் அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் மொத்த நேர் மின்னூட்டத்தின் மதிப்புற்கு இணையாது ஆகும். இதனால் அணுவிற்கு மின்சுமை இல்லை.
Important!
ஓர் அணுவும் சூரிய மண்டலமும் ஒரே மாதிரியான அமைப்பினைக் கொண்டுள்ளன. சூரிய மண்டலத்தினைப் போலவே அணுவானது அணுக்கருவினை மையத்தில் கொண்டுள்ளது. அதனைச் சுற்றி எலக்ட்ரான்கள் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி வருகின்றன.