PDF chapter test TRY NOW
நாம் பிறருடன் கை குலுக்குவதை போல சில அணுக்கள் தங்களின் எலக்ட்ரான்களை பிற அணுக்களுடன் பகிரகூடிய தன்மையைப் பெற்றிருக்கும். சில அணுக்கள் எந்த ஒரு எலக்ட்ரானையும் பகிரக்கூடிய தன்மையைப் பெறாமல் இருக்கும்.
ஓர் அணு பிற அணுவுடன் இணையக்கூடிய திறனே இணைதிறன் எனப்படும்.
ஒரு அணுவுடன் எத்தனை ஹைட்ரஜன் அணுக்கள் இணைய முடியும் என்பதைக் கொண்டு அதன் இணைதிறன் அளவிடப்படுகிறது.
- ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் \(2\) ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து நீர் () மூலக்கூறு உருவாகிறது. எனவே, ஆக்சிஜனின் இணைதிறன் இரண்டாகும் \((2)\) .
- ஒரு குளோரின் அணுவுடன் \(1\) ஹைட்ரஜன் அணு மட்டுமே இணைய முடியும் (). எனவே, குளோரினின் இணைதிறன் ஒன்றாகும் \((1)\).
- ஒரு கார்பன் அணுவுடன் \(4\) ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து மீத்தேன் () மூலக்கூறு உருவாகிறது. எனவே, கார்பனின் இணைதிறன் நான்காகும் \((4)\).
- அம்மோனியாவில் உள்ள நைட்ரஜன் அணு \(3\) ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைகிறது (). எனவே, நைட்ரஜனின் இணைதிறன் மூன்றாகும் \((3)\).
Example:
ஒரு அணுவின் வெளிவட்ட பாதையில் உள்ள எலக்ட்ரான்களே அதன் இணைப்பு திறனை தீர்மானிக்கிறது.
ஒரு தனிமத்தின் அணு, வேறு ஒரு தனிமத்தின் அணுக்களுடன் இணையும் எண்ணிக்கையை இணைதிறன் தீர்மானிக்கிறது.
Important!
அணுக்களைப் பிணைத்திருப்பது என்பது எலக்ட்ரான்கள் எதிர்மின் சுமை கொண்டவை. புரோட்டான்கள் நேர்மின்சுமை கொண்டவை. இவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்பே எலக்ட்ரான்களை அதன் வட்டப்பாதைகளில் பிணைத்து வைத்திருக்கிறது.