PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இணைதிறன் அடிப்படையில் அணுக்கள் வகைப்படுத்தபடுகிறது.
ஒற்றை இணைதிறன்
இணைதிறன் மதிப்பு ஒன்றைக் கொண்ட தனிமங்கள் ஒற்றை இணைதிறன் தனிமங்கள் எனப்படும்.
Example:
ஹைட்ரஜன் மற்றும் சோடியம்
இரட்டை இணைதிறன்
இணைதிறன் மதிப்பு இரண்டைக் கொண்ட தனிமங்கள் இரட்டை இணைதிறன் தனிமங்கள் எனப்படும்.
Example:
ஆக்சிஜன் மற்றும் பெரிலியம்
மும்மை இணைதிறன்
இணைதிறன் மதிப்பு மூன்றைக் கொண்ட தனிமங்கள் மும்மை இணைதிறன் தனிமஙகள் எனப்படும்.
Example:
நைட்ரஜன் மற்றும் அலுமினியம்
சில தனிமங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறனைப் பெற்றிருக்கின்றன.
Example:
இரும்பு ஆக்சிஜனுடன் இணைந்து இரு வகையான ஆக்சைடுகளை உருவாக்கும். பெர்ரஸ் ஆக்சைடு இரண்டு இணைதிறனையும், பெர்ரிக் ஆக்சைடு மூன்று இணைதிறனையும் கொண்டுள்ளன.
தனிமங்கள் அணுக்கள் மற்ற தனிமங்களின் அணுக்களோடு இணையும் போது சேர்மங்களின் மூலக்கூறுகள் உருவாகிறது. அவை எவ்வாறு, எப்படி இணைகிறது என்பதை புரிந்துக்கொள்ள நாம் இணைதிறன் மதிப்பினை அறிதல் அவசியம்.
 
தனிமங்களின் குறியீடு, அணு எண், நிறை எண் மற்றும் இணைதிறன்
  • ஹைட்ரஜன் H, அணு எண்  \(1\), நிறை எண்  \(1\), இணைதிறன்  \(1\).
  • கார்பன் C, அணு எண் \( 6\), நிறை எண்  \(12\), இணைதிறன்  \(4\).
  • ஆக்சிஜன் O, அணு எண்  \(8\), நிறை எண்  \(16\), இணைதிறன்  \(2\).
  • சோடியம் Na, அணு எண்  \(11\), நிறை எண்  \(23\), இணைதிறன்  \(1\).
  • கால்சியம் Ca, அணு எண்  \(20\), நிறை எண்  \(40\), இணைதிறன்  \(2\).