PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅ) பேருந்து ஓய்வில்:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
காலமும் வேகமும் வரைப்படம்
இங்கு வேகம் \(0\) மீ/வி என்ற நிலையிலேயே உள்ளது. எனவே, பேருந்து சுழி முடுக்கத்தினைக் கொண்டுள்ளது.
ஆ) சீரான வேகத்தில் பயணிக்கும் பேருந்து:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 10 | 10 | 10 | 10 | 10 | 10 |
காலமும் வேகமும் வரைப்படம்
இங்கு ,பேருந்து \(10 \)மீ /வி என்ற மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வு சுழி மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் சுழியாகும் .
இ) சீரான முடுக்கத்தில் பயணிக்கும் பேருந்து:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 0 | 10 | 20 | 30 | 40 | 50 |
காலமும் வேகமும் வரைபடம்
இங்கு, பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் \(10\) மீ /வி என்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வானது நேர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும்.
ஈ) சீரான வேகத்தில் பயணிக்கும் பேருந்து:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 50 | 40 | 30 | 20 | 10 | 0 |
காலமும் வேகமும் வரைபடம்
இங்கு, பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் \(10\) மீ / வி என்ற குறைந்து கொண்டே செல்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வானது எதிர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும். இந்த முடுக்கமானது எதிர் முடுக்கம் என அழைக்கப்படுகிறது.
உ) அதிகரிக்கும் முடுக்கத்துடன் பயணிக்கும் பேருந்து:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 0 | 2 | 8 | 18 | 32 | 50 |
காலமும் வேகமும் வரைபடம்
இங்கு, பேருந்தின் வேகமானது ஒவ்வொரு விநாடியிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு,அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கம் அதிகரிக்கிறது.
ஊ) குறைந்த முடுக்கத்துடன் பயணிக்கும் பேருந்து:
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
வேகம் (மீ/வி) | 0 | 45 | 80 | 100 | 120 | 125 |
காலமும் வேகமும் வரைபடம்
இங்கு, பேருந்தின் வேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே செல்கிறது. மேலும், சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு, குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கத்தின் மதிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.