PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநேர் கோட்டில் சீரான வேகத்தில் பயணிக்கும் போது
மேலே உள்ள படம் \( O\) என்ற தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு நேர் கோட்டில் சீரான வேகத்தில் பயணிப்பதைக் காட்டுகிறது. இரு சக்கர வண்டியின் தொலைவு ஒவ்வொரு விநாடிக்கும் அளவிடப்படுகிறது. தொலைவு மற்றும் காலம் பதிவு செய்யப்பட்டு, தரவைப் பயன்படுத்தி ஒரு வரைபடம் வரையப்படுகிறது. பயணத்தின் சாத்தியமான முடிவுகளைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
அ) இரு சக்கர வண்டி ஓய்வில் இருந்தால், ஒவ்வொரு விநாடிக்கும் தொலைவு மாறாமல் இருக்கும்.
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
தொலைவு (மீ) | 0 | 20 | 20 | 20 | 20 | 20 |
நிலையான தொலைவிற்கு ஒரு வரைபடத்தை வரைந்தால், கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு நேர்கோடு கிடைக்கும்.
காலமும் தொலைவும் -வரைபடம்
இந்த வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வு சுழி மதிப்பினைப் பெற்றுள்ளது. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும் தொலைவானது மாறாமல் உள்ளது எனவே, இருசக்கர வண்டி ஓய்வு நிலையில் உள்ளது.
ஆ) இரு சக்கர வண்டி 10 மீ/வி சீரான வேகத்தில் பயணிக்கிறது.
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
தொலைவு (மீ) | 0 | 10 | 20 | 30 | 40 | 50 |
காலமும் தொலைவும் - வரைபடம்
இந்த வரைபடத்தில் சாய்வின் மதிப்பு மாறாமல் உள்ளது. இதில் தொலைவானது ஒவ்வொரு விநாடியிலும் \(10\) மீட்டர் அதிகரிக்கிறது. எனவே, இருசக்கர வாகனம் சீரான வேகத்தில் செல்கிறது.
இ) இரு சக்கர வண்டி அதிக வேகத்தில் பயணிக்கிறது.
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
தொலைவு (மீ) | 0 | 5 | 20 | 45 | 80 | 125 |
காலமும் தொலைவும் -வரைபடம்
இந்த வரைபடத்தில் சாய்வின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே,
இருசக்கர வாகனத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஈ): இரு சக்கர வண்டி குறைந்த வேகத்தில் பயணிக்கிறது.
காலம் (வி) | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
தொலைவு (மீ) | 0 | 45 | 80 | 105 | 120 | 125 |