PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பூவாத் தாவரங்கள் அதன் உடல் அமைப்பினைப் பொருத்துமூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவையாவன:
  1. பெரணிகள்
  2. ஆல்காக்கள்
  3. மாஸ்கள்
ஆல்காக்கள்
 
shutterstock_2093239087.jpgshutterstock_1901881279.jpg
காரா ,லௌரென்சியா
  • இத்தாவரங்களின் உடல் அமைப்பு வேர், தண்டு, இலைகள் என வேறுபடுத்திக் கொள்ள இயலாத வகையில் அமைந்துள்ளது.
  • இத்தகைய அமைப்பிற்கு தாலஸ் என்று பெயர்.
  • தாவர உடல் நாரிழையினைக் கொண்டது.
  • நாரிழைகள் ஒரு செல் அல்லது பல செல்களால் கட்டப்பட்டவை ஆகும்.
மாஸ்கள்
shutterstock_2144767161.jpg
ஃபியூனேரியா
  • இத்தாவரங்களின்  வேர், தண்டு, இலைகள் என வேறுபடுத்திக் கொள்ள இயலாத வகையில் உடல் அமைந்துள்ளது.
  • நீர் நிறைந்த இடங்களில் வளர விரும்புகின்றன.
  • இதன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய ஈரப்பதம் தேவைப்படுகிறது.
  • எனவே, இவை தாவர உலகத்தின் இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
பெரணிகள்
shutterstock_1745736908.jpgshutterstock_2094375043.jpg
குதிரைவாலி, அடியாண்டம்
  • இத்தாவரங்களின் உடல் அமைப்பு வேர், தண்டு, இலைகள் என வேறுபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
  • இலைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ காணப்படும்.
  • பெரணிகளில் வாஸ்குலார் திசுக்கள் உள்ளது. இது நீர், உணவுப் பொருட்களை கடத்த உதவுகிறது.
  • இவை, பெரும்பாலும் நிழலில் வளரக்கூடியவை.
  • ஈரப்பதம் மிகுந்த குளிர் பிரதேசங்களில் அதிகமாக வளர்கின்றன.