
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபூக்கும் தாவரங்கள் உண்டாக்கும் கனியுறுப்பைக் கொண்டு இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவை:
- ஜிம்னோஸ்பெர்ம்
- ஆஞ்சியோஸ்பெர்ம்
ஜிம்னோஸ்பெர்ம்கள்


பைனஸ், சைகஸ்
- இவை, கட்டைத் தன்மை உடையவை
- உண்மையான வேர், தண்டு, இலைகள் உடையவை
- பல ஆண்டுகள் பசுமைத் தன்மையோடு வாழக்கூடியவை
வாஸ்குலார் கற்றைகள் இத்தாவரங்களில் உள்ளன.
- சைலத் திசுக்களில், சைலக் குழாய்கள் மற்றும் புளோயத் திசுக்களில் துணைச் செல்கள் இவற்றில் காணப்படவில்லை.
- சூற்பை இல்லாமல், சூல்கள் திறந்து இருப்பதால் இவ்வகைத் தாவரங்கள் கனிகளை உண்டாக்குவது இல்லை.
- எனவே, திறந்த விதைகள் இருக்கின்றன.
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- வேர், தண்டு, இலைகள் என வேறுபாடு காணமுடியும்.
- நான்கு அடுக்கு மலர்கள் (புள்ளி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூகை வட்டம்) இத்தாவரங்களில் காணப்படும்.
- சூலகம், சூல்கள் (பெண் இனப்பெருக்க உறுப்புகள்) முறையே கனிகளையும், விதைகளையும் பிறப்பிக்கின்றன.
வாஸ்குலார் திசுக்களான சைலம் மாறும் புளோயம் முழுமையாக உள்ளன.
- சைலத் திசுக்களில், சைலக் குழாய்கள் மற்றும் புளோயம் திசுக்களில்,துணை செல்கள் அமையப்பெற்றுள்ளன.
- தற்காலத் தாவர வகைகளில் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மேம்பாடு அடைந்தவைகளாகக் காணப்படுகின்றன.
தாம் கொண்டுள்ள வித்திலைகளின் எண்ணிக்கையை பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
- ஒரு வித்திலைத் தாவரம்
- இரு வித்திலைத் தாவரம்



நெல், புளி

இரு வித்திலைத் மற்றும் ஒரு வித்திலைத் தாவரங்களின் விதைகள்