PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிமுகம்
R.H விட்டேக்கர்  என்பவர் ஐந்து உலக வகைப்பாட்டு முறையை \(1969\) ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இவ்வகைப்பாட்டு முறை அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இரண்டு உலக வகைப்பாட்டு முறையில் இருந்த குறைகளைக் களையும் வகையில் மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
 
ஐந்து உலக வகைப்பாட்டு முறை பின்வரும் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன:  
  • செல் அமைப்பு  
  • உணவு ஊட்ட முறை  
  • உணவு மூலம்  
  • உடல் அமைப்பு
YCIND20220725_4041_Basis of classification_10.png
ஐந்து உலகங்கள்
 
ஐந்து உலக வகைப்பாட்டின் நிறைகள்:
  • அறிவியல் ரீதியாகவும், இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ள வகைப்பாடு ஆகும்.
  • செல்லின் அமைப்பு, உணவு முறை, பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலை போன்ற பண்புகளைத் தெளிவாகக் குறிக்கின்றது.
  • வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உயிரினங்கள் மரபு வழியில் வகைப்படுத்தப்படுகின்றது.
  • பெரும்பான்மையாக ஏற்றுகொள்ளத்தக்க நவீன வகைப்பாட்டு முறை ஆகும்.
  • எளிமையான உயிரினம் முதல் சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதை விளக்குகிறது.
ஐந்து உலக வகைப்பாட்டின் குறைகள்:
  • இவ்வகைப்பாட்டில் வைரஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
  • ஆல்காக்களை ஒரு செல் உயிரினம் அல்லது இரு செல் உயிரினம் எனப் பகுப்பது கடினம்.
  • பல செல் உயிரினங்கள் புரோடிஸ்டுகளிடம் இருந்து பல முறை தோற்றுவிக்கப்படுகிறது.
  • அடிமட்ட உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
  • புரோடிஸ்டாவின் கீழ் வரும் சில உயிரினங்கள் யூகேரியோடிக் பண்பு கொண்டவை அல்ல.