
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு செல் உயிரினங்களும் சில எளிய யூகேரியோட்டுகளும், புரோட்டிஸ்கள் ஆகும்.
புரோடிஸ்டுகளை இரு குழுக்களாகப் பிரிக்கலாம்.
- தாவர வகை
- விலங்கு வகை
தாவர வகை புரோட்டிஸ்டுகள்
- இவைகளை பொதுவாக, பாசிகள் என்று அழைப்பர்.
- இவை, தாவரங்கள் போல், ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன.
Example:
டையடம்ஸ் மற்றும் கிளாமிடோமோனாஸ்


கிளாமிடோமோனாஸ் மற்றும் டையடம்ஸ்
விலங்கு வகை புரோட்டிஸ்டுகள்
- இவைகளை, புரோட்டோசோவான்கள் என்றும் அழைக்கலாம்.
- இவ்வகை புரோட்டிஸ்டுகள், விலங்குகளைப் போல், பிறசார்பு ஊட்ட முறையைப் பின்பற்றுகின்றன.
Example:
அமீபா, பாரமீசியம் மற்றும் யூக்ளினா

அமீபா, யூக்ளினா, மற்றும் பாரமீசியம்
- அமீபா, யூக்ளினா, மற்றும் பாரமீசியம் ஆகியவற்றை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க இயலும்.
- போலிக்கால்கள் பெற்றிருக்கும் இவை கசையிழை, குறு இழை கொண்டு நகர்கின்றன.
- பிளவு முறை (அ) இணைவு முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.