PDF chapter test TRY NOW
பொருட்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் உற்று நோக்கிப் பகுத்தலே இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் ஆகும்.
- Dichotomous key என ஆங்கிலத்தில் அழைக்கப்படும், இந்தக் கருவி ஒரு குறிப்பிட்டப் பொருளை விரைவாக இனம் கண்டு அறிந்து கொள்ள உதவுகிறது.
- உயிரியல் வல்லுனர்கள் எளிதாக ஒரு உயிரினத்தை இனம் கண்டு ஆராய்ந்து அறிந்து கொள்ள, இக்கருவி உதவுகிறது.
- இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோலைப் பயன்படுத்தி வகைப்பாட்டியல் உருவாக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
- ஒரு சிறப்பு அம்சம் ஒரு குழுவையே வேறுபடுத்திக் காட்டுகிறது.
- ஒரு குறிப்பிட்டப் பண்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உண்டு அல்லது இல்லை எனப் பட்டியலிட்டு ஒரு குழுவைப் பிரிக்க முடிகிறது.
- இறுதியாக ஒன்று மட்டும் மீதம் இருக்கும் பொழுது, இரண்டாவது நிலையைத் தொடர்கிறது.
இதனைச் சிறு பயிற்சியின் மூலம் கற்காலம்:
மாணவர்களே உங்கள் வகுப்பறையில் காணப்படும் சில பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோலை பயன்படுத்தி வகைப்படுத்தவும்.
வண்ணப் பென்சில், நாற்காலி, கதவு, மேசை, கரும்பலகை, தண்ணீர்க் குடுவை, மதிய உணவுப் பெட்டி, மின் விசிறி, பாடநூல், பென்சில் கூர்மையாக்கும் கருவி.
மரத்தால் ஆனவை:
மரம் அற்றவை:
Answer variants:
வண்ணப் பென்சில்
பென்சில் கூர்மையாக்கும் கருவி
கரும்பலகை
மதிய உணவுப் பெட்டி
மின் விசிறி
தண்ணீர்க் குடுவை
மேசை
பாடநூல்
நாற்காலி
கதவு
விடைகளைக் கீழே காணலாம்.
மரத்தால் ஆனவை:
வண்ணப் பென்சில், நாற்காலி, கதவு, மேசை, கரும்பலகை
மரம் அற்றவை:
தண்ணீர்க் குடுவை, மதிய உணவுப் பெட்டி, மின் விசிறி, பாடநூல், பென்சில் கூர்மையாக்கும் கருவி.
இரு பகுதிகளாகப் பகுத்தல்