PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் நாம் மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படும் மின்சாவிப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
நமது வீடுகளிலும், பள்ளிகளிலும் மின்சாவிப்பலகையில் பல்வேறு விதமான மின்சாவிகளை நாம் பார்த்திருக்க கூடும். சாவிகள், அவற்றின் பயன்பாடு மற்றும் கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் பல்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை அனைத்தும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. நாம் பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சாவிகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஓர் மின்சுற்றில் மின்னோட்டத்தைப் பாய அனுமதிக்கவோ அல்லது மின்னோட்டம் பாய்வதை நிறுத்தவோ பயன்படும் சாதனம் மின்சாவி ஆகும்.
சாவி
- வீட்டு மின்சாதனங்களை இயங்க வைக்கவும் அல்லது நிறுத்தவும், பல்வேறு வகையான மின்சாவிகள் பயன்படுத்தப்படுகிறது.
- மின்சாதனங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயங்கச் செய்யவும் நிறுத்தவும் மின்சாவிகள் உதவுகிறது.
நாமே நம் மின்சுற்றினுக்கு ஒரு மின்சாவியை உருவாக்க முடியுமா ?
ஆம் முடியும்.
மூடிய மின்சுற்று
- படத்தில் காட்டியுள்ளபடி, \(10\) செ.மீ நீளமுள்ள நீளமான இரும்புத் தகட்டைஎடுத்துக் கொள்ள வேண்டும்.
- இருமுறை மடித்துக்கொள்ள வேண்டும்.
- மரக்கட்டையின் வளைவு வழியே ஓர் ஆணியை பொருத்த வேண்டும். மரக்கட்டையின் மற்றொரு முனையில் ஆணியினை பயன்படுத்தி தகட்டின் மற்றொரு முனையை அமைக்க வேண்டும்.
- இரும்புத் துண்டானது, முதல் ஆணியைத் தொடாத வண்ணம் அதன் மேல் பொருத்தி மரக்கட்டையின் மறுமுனையில் இரும்புத் துண்டு மற்றொரு முனையை ஆணியின் உதவியால் அமைக்க வேண்டும். தற்போது, மின்சாவியானது தயாராகிவிட்டது.
உனது மின்சாவியினை சோதிக்க நீ விரும்புகிறாயா?
திறந்த மின்சுற்று
படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு மின்சுற்றை அமைக்க வேண்டும். மின்சுற்றினை திறக்கவும் மூடவும் மின்சாவியினை நீ எவ்வாறு பயன்படுத்துவாய்?
- மின்சாவியின் உலோகத்துண்டானது ஆணி மீது அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்ந்தாலும் அழுத்துவது நிறுத்தப்பட்டவுடன் மின்விளக்கு ஒளிர்வது நின்றுவிடும். நாம் உருவாக்கிய தொடுசாவியானது எளிய சாவியாகும்.
- மின்சாவியானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உலோகத் தகட்டுடன் உள்ளகத்தே இணைக்கப்பட்ட ஓர் இயங்கு சாதனமாகும்.
Example:
சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் \(ATM\)கார்டுகள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளன என்று உனக்குத் தெரியுமா?
சிம் கார்டுகள்
சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் \(ATM\) கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகள், சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது, நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும்.