PDF chapter test TRY NOW
சென்றப்பகுதியில் மின்கலத்தைப் பற்றி கற்றுக்கொண்டோம். இப்பகுதியில் மின்கல அடுக்கு மற்றும் மின்கலன் கண்டுபிடிப்பு பற்றிய தகவலைப் பகிர்ந்துக் கொள்ளப்போகிறோம்.
மின் சுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்க கூடிய, வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்கு ஆகும்.
மின்கலன் அடுக்கு
அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களைக் கொண்டது ஆகும்.
- நேர் மின் முனை அல்லது ஆனோடு (+)
- எதிர் மின் முனை அல்லது கேதோடு (-)
- மின் பகு திரவம்
மின்பகு திரவம் என்பது நேர் மின்முனை அல்லது ஆனோடு மற்றும் எதிர் மின்முனை அல்லது கேதோடுடன் வேதிவினை புரியும் ஓர் திரவமாகும்.
முதன் முதலில் மின்கலத்தை யார் கண்டுபிடித்தது என்று சிந்தித்தது உண்டா ?
மின்கலன் அல்லது மின்கல அடுக்கு எவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டது என்ற சுவாரசியமான தகவலை கீழே படித்து அறிந்துக் கொள்வோம்.
மின்கல அடுக்கின் கண்டுபிடிப்பு
1780 ஆம் ஆண்டு, இத்தாலிய நாட்டு இயற்பியலாளர், உயிரியலாளர் மற்றும் தத்துவ மேதையான "லூயி கால்வானி" ஒரு பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு ஆய்வு செய்துக் கொண்டிருந்தார் .
- அப்பொழுது தற்செயலாக தவளையின் காலை இரும்பு இடுக்கி கொண்டு தொட்ட போது அதன் கால்கள் துடிக்க ஆரம்பித்தது.
மாதிரி சோதனை
- அந்த துடிப்பிற்கான ஆற்றலானது தவளையின் காலில் இருந்து உருவானது என கருதினார், ஆனால் அதற்கு பிறகு வந்த அறிவியலாளர்களான "அலெக்சாண்ட்ரோ வோல்டா" மாறுபட்டை கண்டுபிடித்தார்.
- ஒரு நாள், வோல்டா திரவத்தில் கரைந்துள்ள வேறுபட்ட உலோகங்களே தவளையின் காலின் துலங்கலுக்கு காரணம் என கருதினார்.
- பின்பு அவர் ஒரு தவளை சடலத்திற்குப் பதிலாக உவர்நீரால் துடைத்த துணியால் இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்த போது, அதேபோன்ற மின்னழுத்தம் உருவானது.
- இதன் பிறகு "வோல்டா" 1791 இல் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார், பிறகு 1800 ஆம் ஆண்டில் முதல் மின்கலனான, "வால்டிக் குவியலை" உருவாக்கினார்.
- நவீன மின்கலன் கண்டுபிடிப்பிற்கு அலெஸாண்ட்ரோ வோல்டா அவர்களே பெரிதும் காரணமாக இருந்தார்.
- உண்மையில் இது, தவளையின் உடலை உடற்கூறு செய்ய ஆரம்பித்த போது ஏற்பட்ட ஓர் அதிசய நிகழ்வாகும்.