PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இன்று மின்சாரமானது வீடுகளுக்கு அவசியமான ஒன்றாகும். ஆனால், முதன் முதலில் மின்சாரம் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது ? யார் மின்சாரத்தை கண்டுபிடித்தது ? என்று சிந்தித்தது உண்டா? 
 
\(1882\) - ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற்றது. அது \(9000\) வீடுகளில் \(14000\) மின்விளக்குகளின் சாவியை தாமஸ் ஆல்வா எடிசன் எனும் அறிவியல் அறிஞர் திறந்த தருணம் அனைத்து விளக்குகளும் எரியத் தொடங்கியது, இது மனித இனத்திற்கு ஓர் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும், அன்றிலிருந்து தான் இரவு நேரத்திலும் உலகமே வெளிச்சத்திற்கு வந்தது. அந்நிகழ்விற்குப்பின் பல நாடுகள் நியூயார்க்கிற்கு அடுத்தபடியாக மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.
 
thomasalvaedison677631920.jpg
தாமஸ் ஆல்வா எடிசன்
  • \(1899\) - ஆம் ஆண்டு இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது. 
  • \(1899\) - ஆம் ஆண்டு ஏப்ரல் \(17\) – ம் நாள் முதல் அனல் மின் நிலையத்தை கல்கத்தா மின் விநியோக கழகம் துவங்கியது.
  • \(1900\) - ஆம் ஆண்டு சென்னையில் பேசின் பாலத்தில் அனல் மின் நிலையம் திறக்கப்பட்டது. மேலும், அரசு அச்சகம் பொது மருத்தவமனை, மின் தண்டூர்திப்பாதை மற்றும் சென்னையின் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் மின் விநியோகம் செய்யப்பட்டது. 
 
தொழிற்சாலைகள் இயங்கவும் மருத்துவச் சாதனமான செயற்கை உயிர்ப்பு அமைப்புகளிலும், தகவல் தொடர்பு சாதனமான கைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் வேளாண் நிலங்களில் இருந்து நீர் இறைக்கவும், வீடுகளை ஒளியூட்டவும் மின்சாரம் முக்கியமானதாகும்.
 
stockvaultelectricsupply191557.jpg
மின்சார உபயோகம்
 
மின்சாரம் என்றால் என்ன?
 
வெப்ப ஆற்றல் மற்றும் காந்த ஆற்றல் போன்று மின்சாரமும் ஓர் வகையான ஆற்றலாகும்.
 
YCIND20220805_4002_Electricity_01 (3).png
அணுவின் உள் அமைப்பு
  • ஒரு அணுவின் மையப்பகுதியானது உட்கரு என அழைக்கப்படுகிறது. 
  • உட்கரு புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக் கொண்டிருக்கும். 
  • புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டது ஆகும்.
  • நியூட்ரான்கள் மின்சுமையற்றது ஆகும். 
  • அணுவின் உட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வரும்.
  • அணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரம் எனப்படுகிறது.
மின்னூட்டம் கூலூம் என்ற அலகினால் அளவிடப்படுகிறது. ஓரலகு கூலூம் என்பது தோராயமாக 6.242×1018 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம். மின்னூட்டம், பொதுவாக \("q" \)என்ற எழுத்தால் குறிக்கப்படும்.