
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் மின்னோட்டத்தைப் பற்றியும் மற்றும் மின்னோட்டத்தின் அலகுப் பற்றியும் அறிந்துக் கொள்வோம்.
ஒரு மின்சாதனம் இயங்க வேண்டும் என்றால், அச்சாதனம் வழியே மின்னோட்டம் பாய வேண்டும்.
ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது. எனவே, மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படுகிறது.

குறுக்கு வெட்டுப் பரப்பு
மின்னோட்டத்தின் குறியீடு ‘I’ ஆகும். மின்னோட்டத்தின் SI அலகு, ஆம்பியர் ஆகும். ஆம்பியர் A என்ற எழுத்தால் குறிப்பிடப்படும்.

எளிய மின்சுற்று
ஒரு கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.

மின்னோட்டத்தை அளவீடும் கருவி
எனவே,
I = \frac{\text{q}}{\text{t}}
இங்கு,
- I - மின்னோட்டம் (ஆம்பியரில் –A)
- q - மின்னூட்டம் (கூலூம்களில் –C)
- t - எடுத்துக் கொண்ட காலம் (விநாடிகளில் –S)