PDF chapter test TRY NOW

இப்பகுதியில் மின்னோட்டம் பாய்வதால் உருவாகும் காந்த விளைவைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
 \(1819\) ஆம் ஆண்டு "ஹான்ஸ் கிறிஸ்டியன்" என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கினார்.
 
470pxHansChristianØrstedbyHWBissen.jpg
ஹான்ஸ் கிறிஸ்டியன்
  
YCIND18072022_4003_Electricity_09.png
காந்த விளைவை உருவாக்கும் மின்சுற்று
 
கீழ்க்காணும் செயல்பாட்டின் மூலம், மின்னோட்டத்தின் காந்த விளைவை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
 
தேவையான பொருள்கள்:
  • இரும்பு ஆணி
  • மின்கல அடுக்கு
  • மின் அவிழ்ப்பான்
  • மின் கம்பி
செயல்முறை:
  • சுமார் \(75\) செ.மீ நீளமான ஓர் காப்பிடப்பட்ட நெகிழும் தன்மை கொண்ட ஓர் கம்பியை  எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • \(8\) முதல் \(10\) செ.மீ நீளம் கொண்ட ஓர் இரும்பு ஆணியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • ஆணியைச் சுற்றி கம்பிச் சுருள் போல் கம்பியை மிகவும் நெருக்கமாக சுற்றிக் கொள்ள வேண்டும். 
YCIND18072022_4003_Electricity_16.png
  • படத்தில் காட்டியுள்ளபடி, மின்கலத்துடன் கம்பியின் திறந்த முனைகளை இணைக்க வேண்டும். ஆணியின் முனைக்கருகில் சில குண்டூசிகளை வைக்க வேண்டும்.
  • மின்சாவியானது மூடிய நிலையில் உள்ள போது ஆணியின் முனைகளில் குண்டூசிகள் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். 
  • மின்சாவியானது திறந்த நிலையில் மின்னோட்டம் பாய்வது நிறுத்தப்பட்டவுடன் கம்பிச் சுருள் தனது காந்தத் தன்மையை இழந்துவிடும்.
  • மின்னோட்டம் பாயும் திசையைப் பொறுத்து கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் மின்முனைவுகள் மாற்றமடையும்.