PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் ஒரு சில காரணிகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
கீழே மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முறையே:
- பாயும் மின்னோட்டத்தின் அளவு
- மின்தடை
- மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்
மின் உருகி
மின் உருகியானது, ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும். இது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும். இந்த சாதனம் பீங்கானால் உருவாக்கப்படுகிறது.
மின் உருகி
- பொதுவாக மின் உருகியில் மின் உருகு இழை இணைக்கப்பட்டு இருக்கும்.
- உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.
- இதன் காரணமாக மின்சுற்று துண்டிக்கப்பட்டு விலைமதிப்பு மிக்க மின்சாதனங்கள் மற்றும் மின்கம்பிகள் பழுதடையாமல் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.
கண்ணாடியால் ஆன மின் உருகி
- மின் சாதனங்களில், கண்ணாடியால் ஆன மின் உருகி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் சிறிய கண்ணாடிக் குழாய் ஒன்றினுள் மின் உருகு இழையானது இணைக்கப்பட்டிருக்கும்.
குறு சுற்று துண்டிப்பான் - (MCBs)
குறு சுற்று துண்டிப்பான்
அதிக இடங்களில் குறு சுற்று துண்டிப்பானானது மின்உருகிகளின் மாற்றாகப் பயன்படுத்தப்படும். மின் உருகிகளைக் கையாளுவதில் அதிக செயல்முறை சிக்கல்கள் உள்ளன. மின் உருகு கம்பியானது உருகும் தருணம் மின்சாரத்தை மீட்பதற்கு வேறு ஓர் கம்பியை மாற்றி அமைக்க வேண்டும்.
பொதுவாக இச்செயலானது மிகவும் சிக்கலான ஒன்றாகும். குறு சுற்று துண்டிப்பானானது தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் பண்பு கொண்டது ஆகும். மின்சாரத்தை தானாக மீட்டெடுக்கும் விதமாக அதன் இயங்கும் வீதம் இருக்கும்.